100 குடும்பக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள்..!
| | | |

100 குடும்பக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள்..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 100 குடும்பக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு  மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 100 குடும்பங்களுக்கு இவ்வாறு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் இந்த காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. குறித்த காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், பிரதேச செயலாளர் உட்பட அரச அதிகாரிகள் கலந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

செந்தில் தொண்டமானை வாழ்த்திய வைரமுத்து
| | |

செந்தில் தொண்டமானை வாழ்த்திய வைரமுத்து

அன்று மகாகவி பாரதியார் சொன்னதை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இன்று நடைமுறைப்படுத்தி வருகிறார் என கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த வாரங்களில் செந்தில் தொண்டமான் தலைமையில் இலங்கையில் இடம்பெற்ற பொங்கல் விழாவில்  ஜல்லிக்கட்டு, சிலம்பாட்டம் மற்றும் தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள் போன்றவற்றை நிகழ்த்தியமைக்காகவே இந்த பாராட்டு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் கவிஞர் வைரமுத்து, தனது டுவிட்டர் பதிவில்  தமிழ் பாரம்பரியத்தை மீட்டெடுத்த ஆளுநர் செந்தில் தொண்டமானை அகமகிழ்ந்து  வாழ்த்துவதாக கவிதை ஒன்றின் மூலம்…

அதிபர் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு வழங்கும் இலங்கை  தொழிலாளர் காங்கிரஸ்
| | | |

அதிபர் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு வழங்கும் இலங்கை  தொழிலாளர் காங்கிரஸ்

இலங்கை  தொழிலாளர் காங்கிரஸ்  கட்சியானது நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில்      தற்போதைய ஜனாதிபதியான  ரணில் விக்ரமசிங்கவிற்கே தமது ஆதரவென அறிவித்துள்ளது. இவ் அறிவித்தலை கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுனருமான செந்தில் தொண்டமான் வெளிநாட்டு ஊடகமொன்றின்  நேர்காணலின் போது இதை தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த நாட்டை ரணில் மீட்டெடுத்து  ஸ்திரப்படுத்தியுள்ளார். நாடு கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கிய போது, எவரும் ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. நாட்டில் தற்பொழுது ஆட்சி மாற்றம்…

திருகோணமலையில் இடம்பெற்ற  கலாச்சாரப் பொங்கல் திருவிழா
| | |

திருகோணமலையில் இடம்பெற்ற  கலாச்சாரப் பொங்கல் திருவிழா

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் பொங்கலை வரவேற்கும் முகமாக கடந்த சில தினங்களாக  திருகோணமலை மாவட்டத்தில் பல்வேறு கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்று வந்தன. குறிப்ப்பாக இலங்கை வரலாற்றில் முதல் முறையாக தமிழரின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைப்பெற்றிருந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்றைய தினம்(08) 1008 பொங்கல் பானைகள் , 1500 பரத நாட்டிய கலைஞர்கள், 500 கோலங்களுடன்    கலாச்சாரப் பொங்கல் திருவிழா  வெகு விமர்சையாக நடைப்பெற்றது. தமிழர் பாரம்பரியத்தை கட்டியெலுப்பும் செயட்பாடுகளை  மேற்கொண்டு…