ஹவுதி தாக்குதலால்  ஏடன் வளைகுடாவில் மூழ்கிய இங்கிலாந்து கப்பல்..!
| | | | |

ஹவுதி தாக்குதலால்  ஏடன் வளைகுடாவில் மூழ்கிய இங்கிலாந்து கப்பல்..!

செங்கடலை ஏடன் வளைகுடாவுடன் இணைக்கும் பாப் எல்-மண்டேப் ஜலசந்தி வழியாக பெலிஸ் கொடியுடன் கூடிய இங்கிலாந்து கப்பலான ரூபிமார் சரக்குக் கப்பல், ஹவுதிகளின் தாக்குதலுக்கு உள்ளானதாக ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கை மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் குறித்த கப்பலில் இருந்தவர்கள் தாக்குதல் ஏற்பட்டவுடன் கப்பலைக் கைவிட்டதால் அந்த கப்பல் பெரும் சேதம் அடைந்து மூழ்கியுள்ளதாக ஹவுதி குழுவின் இராணுவ செய்தி தொடர்பாளர் யாஹ்யா சரியா தெரிவித்துள்ளார். மேலும், ஏடன் வளைகுடாவில் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களால்…

ஏடன் வளைகுடாவில் பற்றி எரிந்த கப்பல்
| | | | |

ஏடன் வளைகுடாவில் பற்றி எரிந்த கப்பல்

ஹவுதி போராளிகள்  செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதியில் வணிக கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,  நேற்று(27) ஏடன் வளைகுடா பகுதியில் பிரித்தானியாவை சேர்ந்த எண்ணெய்க் கப்பலான எம்.வி. மர்லின் லுவாண்டாவை தாக்கியுள்ளதோடு எண்ணெய் கப்பல் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனைத்தொடர்ந்து எண்ணெய் கப்பலில் இருந்தவர்கள், இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ் விசாகப்பட்டினம் கப்பலை தொடர்புக்கொண்டு உதவிக்கோரியுள்ளனர். இதனையடுத்து ஐ.என்.எஸ் விசாகப்பட்டினம் கப்பலில் இருந்து தீயணைப்பு சாதனங்களுடன் மீட்பு குழுவினர் அங்கு அனுப்பப்பட்டனர். எண்ணெய்க் கப்பலில் 22…

கிரேக்க கப்பலை தாக்கிய ஹௌத்தி
| | | |

கிரேக்க கப்பலை தாக்கிய ஹௌத்தி

கிரேக்கத்துக்குச் சொந்தமான ஜோக்ராஃபியா (Zografia) என்ற கப்பல் வியட்நாமில் இருந்து இஸ்ரேலுக்குப் பயணம் செய்து கொண்டிருந்தபோது, செங்கடல் பகுதியில் கடந்த ​​செவ்வாய்கிழமை தாக்கப்பட்டுள்ளது. இக் கப்பலிற்கு சிறிய சேதம் மட்டுமே ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையின் போது ஹௌத்திகளுக்கு ஈரான் வழங்கிய ஆயுதங்களை கைப்பற்றியதாக அமெரிக்க இராணுவம் அறிவித்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதற்கிடையில், யெமனில் ஹௌத்திகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அமெரிக்கா அதிக இலக்குகளை தாக்கியுள்ளது. ஏவப்படத் தயாராக இருந்த…

பராக்கிரமபாகுவிற்கு பின் கடலெல்லையை பாதுகாக்கும் ரணில் விக்கிரமசிங்க
| | | | |

பராக்கிரமபாகுவிற்கு பின் கடலெல்லையை பாதுகாக்கும் ரணில் விக்கிரமசிங்க

செங்கடல் ஊடாக இலங்கைக்கு வரும் சரக்குக் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால் கொழும்பு உள்ளிட்ட இலங்கை துறைமுகங்களுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மகா பராக்கிரமபாகுவின் ஆட்சியின் பின்னர் சர்வதேச கடற்பரப்பை பாதுகாக்க இலங்கையில் இருந்து கப்பல்கள் அனுப்பப்படுவது இதுவே முதல் தடவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். போர்க்கப்பலை செங்கடலில் நிலைநிறுத்தி அந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் செலவைப் பார்க்கும் போது, ​​கப்பல்கள் இலங்கைக்கு வராததால் நாடு பாரிய பொருளாதார இழப்பை சந்திக்கும் என…

மாலைத்தீவு கடற்பரப்பில் எண்ணெய் கப்பல்கள் மீது ஆளில்லா விமான தாக்குதல்
| | | |

மாலைத்தீவு கடற்பரப்பில் எண்ணெய் கப்பல்கள் மீது ஆளில்லா விமான தாக்குதல்

மாலைத்தீவு  கடற்பரப்பில் இஸ்ரேலுக்கு சொந்தமான இரண்டு எண்ணெய் கப்பல்கள் ஆளில்லா விமானம் மூலம் தாக்கப்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் தகவல்கள் தெரிவித்துள்ளன. மாலைத்தீவின் வடக்கு மற்றும் வடமேற்கு கடற்பரப்பிலேயே இந்த ஆளில்லா விமான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த எண்ணெய் கப்பல்கள் பப் அல் மன்டாப் நீரிணை மற்றும் செங்கடலை கடந்து பயணிக்க திட்டமிட்டிருந்தது  என தகவல்கள் வெளியாகியுள்ளன. பப் அல் மன்டாப் நீரிணையிலிருந்து 2000 கிலோமீற்றர் தொலைவில் இந்த ஆளில்லா விமான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. மீண்டும் தாக்கப்படலாம்…