இரண்டாவது தகுதி போட்டி இன்று
| | |

இரண்டாவது தகுதி போட்டி இன்று

நடைபெற்றுவரும் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது தகுதி போட்டி இன்றைய தினம் நடைபெறவுள்ளது. ஏற்கனவே முதலாவது தகுதிப் போட்டியில் வெற்றிபெற்று சுரேஷ் ரைனா தலைமையிலான Urbanrisers Hyderabad அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது. இதேவேளை இன்றைய தினம் கௌதம் கம்பீர் தலைமையிலான India Capitals அணியும், ஹர்பஜன் சிங் தலைமையிலான Manipal Tigers அணியும் இரண்டாவது தகுதி போட்டியில் மோதவுள்ளன. இப்போட்டி இன்று மாலை 6:30 மணியளவில் சூரத்தில் நடைபெறவுள்ளது.