காய்ச்சலால் மாணவி உயிரிழப்பு – யாழில் துயரம்..!
| | | |

காய்ச்சலால் மாணவி உயிரிழப்பு – யாழில் துயரம்..!

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் காய்ச்சல் காரணமாக 16 வயதுடைய மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 7ஆம் திகதி இடையிடையே காய்ச்சல் ஏற்பட்டதால் நேற்றுமுன்தினம் காலை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அன்றிரவே உயிரிழந்துள்ளார். திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் இறப்பு விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். இறப்பிற்கான காரணத்தை கண்டறிவதற்காக உடற்கூற்று மாதிரி கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

யாழில்  குடும்பஸ்தரின் சடலம்..!
| | | |

யாழில்  குடும்பஸ்தரின் சடலம்..!

யாழ்ப்பாணம் சுன்னாகம் புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றில் இருந்து 63 வயதுடைய சின்னத்துரை தவராசா என்ற குடும்பஸ்தர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த குடும்பஸ்தரை காணவில்லை என உறவினர்கள் தேடி வந்த நிலையில் அவர் இவ்வாறு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.