தொண்டையில் மாத்திரை சிக்கி உயிரிழந்த  சிறுமி..!
| | | |

தொண்டையில் மாத்திரை சிக்கி உயிரிழந்த சிறுமி..!

மஹியங்கனையில் மருந்து மாத்திரை ஒன்று தொண்டையில் சிக்கியதில் நான்கு வயது சிறுமி ஒருவர் நேற்று(12) உயிரிழந்துள்ளார். ஓஷதி சவிந்தயா ராஜபக்ச என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும் காய்ச்சல் காரணமாக பாட்டி கொடுத்த மாத்திரையொன்று சிறுமியின் தொண்டையில் சிக்கியுள்ளது. இதனால் மயக்கமடைந்த சிறுமி மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்துள்ளார்.