வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதியின் சடலம் மீட்பு..!
| | | |

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதியின் சடலம் மீட்பு..!

வவுனியாவில் இளம் யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிசார் இன்று தெரிவித்தனர். ஆசிகுளம், சிதம்பரநகர் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய கவிப்பிரியா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் உள்ள தனது வீட்டில்  இந்த  இளம் யுவதி  தூக்கிட்ட நிலையில் சடலமாக காணப்பட்டதாக  சிதம்பரபுரம் பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த யுவதியின் சடலம் இன்று காலை பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சிதம்பரபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் கிணற்றில் தவறி விழுந்து யுவதி பலி..!
| | | |

வவுனியாவில் கிணற்றில் தவறி விழுந்து யுவதி பலி..!

வவுனியா, சமளங்குளம் பகுதியில்  நேற்றைய தினம்(17) கிணற்றில் தவறி விழுந்து யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா, சமளங்குளம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய தவரூபன் லக்சிகா என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று  மாலை குறித்த யுவதி கிணற்று மோட்டரை இயக்க முயற்சித்த போது அதன் குழாய் கழன்றமையால் அதனை பூட்ட முயற்சித்த போது கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தொடர்ச்சியாக கிணற்று மோட்டர் இயங்கிக் கொண்டிருப்பதை அயல் வீட்டார்…