கட்டுநாயக்கவில் இரு வர்த்தகர்கள் கைது..!
| | | |

கட்டுநாயக்கவில் இரு வர்த்தகர்கள் கைது..!

நாட்டிற்குள் சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 50 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களுடன் இரு வர்த்தகர்கள் கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை கைதுசெய்யப்பட்டவர்கள் ஜா – எல, இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 58 மற்றும் 50 வயதுடையவர்களாவர். குறித்த இருவரும் இன்று (8) அதிகாலை 12 மணியளவில் சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இந்நிலையில், இந்த இரு வர்த்தகர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர்கள் கொண்டுவந்த பயணப் பொதிகளிலிருந்து…

டிரான் அலஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்ததை நிராகரித்தது ஆசிய இணைய கூட்டமைப்பு   
| | | |

டிரான் அலஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்ததை நிராகரித்தது ஆசிய இணைய கூட்டமைப்பு  

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நாடாளுமன்றத்தில் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்த விவாதத்தில் வெளியிட்ட கருத்துக்களை நிராகரித்துள்ளது. ஆசிய இணைய கூட்டமைப்பு நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் அதன் தற்போதைய வடிவத்தில் முன்னெடுக்க முடியாது என்றும்  , இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் சாத்தியாமான  வளர்ச்சி மற்றும் வெளிநாட்டு முதலீட்டினை பாதிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது. உலகின் மிகவும் வலுவான இணைய தொழில்நுட்ப நிறுவனங்களை உள்ளடக்கிய அமைப்பே ஆசிய இணைய கூட்டமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த அமைப்பு ஆசிய…

திருகோணமலை கடற்கரையில் தொடர்ச்சியாக குவியும் வெளிநாட்டு குப்பைகள்  
| | |

திருகோணமலை கடற்கரையில் தொடர்ச்சியாக குவியும் வெளிநாட்டு குப்பைகள்  

திருகோணமலை கடற்கரையோரத்தில் தற்போது அதிகளவு குப்பைகள் குவிந்து வருவதாகவும், அதில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து வந்தவை என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை  நேற்றைய தினம் (11) தெரிவித்துள்ளது. தற்போது கடற்படை மற்றும் ஏனைய தன்னார்வ தொண்டு நிறுவனங்களை தொடர்பு கொண்டு குவிந்துள்ள குப்பைகளை அகற்றும் பணியை திருகோணமலை மாநகர சபை மேற்கொண்டு வருகின்றது.  அந்த சுத்த பணிக்கு  உழவு இயந்திரங்கள் மற்றும் பெகோ இயந்திரங்களை பயன்படுத்த வேண்டியுள்ளது. பருவமழைக் காலங்களில் கடலுக்கு அடியில் ஓடும் நீரோட்டம் காரணமாக, இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர்…

வாக்குமூலத்திற்காக CID இல் ஆஜரான ஜெரோம் பெர்னாண்டோ
| | | |

வாக்குமூலத்திற்காக CID இல் ஆஜரான ஜெரோம் பெர்னாண்டோ

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுப் பிரிவில் இன்று (30) காலை ஆஜராகியுள்ளார். பௌத்த மதத்திற்கு அவமரியாதையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு சிங்கப்பூர் சென்ற அவர், நேற்று (29) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். சிங்கப்பூர் சென்ற போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை கைதுசெய்யுமாறு உத்தரவிட்டிருந்த நீதிமன்றம், பின்னர் அவர் இலங்கை வரும் போது கைதுசெய்ய வேண்டாமெனவும் நாட்டுக்கு வருகை தந்து 48 மணிநேரத்தில் அவர் வாக்குமூலமொன்றை வழங்க வேண்டுமென்றும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், போதகர் ஜெரோம்…