அதிகரித்த சட்டவிரோத சிகரெட் பாவனை – வருமான வீழ்ச்சியில் அரசாங்கம்
| |

அதிகரித்த சட்டவிரோத சிகரெட் பாவனை – வருமான வீழ்ச்சியில் அரசாங்கம்

சிகரெட்டுகளின் விலை அதிகரிப்பால் இந்த நாட்டில் சட்டவிரோத சிகரெட்டுகளின் பாவனையின் அதிகரித்து வருகின்றது. இதற்கு காரணம் சிகரெட்டுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளாகும். இவ்வருடம் எதிர்பார்க்கப்படும் அரசாங்க வருமானம் 52 பில்லியன் ரூபாவால் குறையும் என சந்தை ஆய்வில் கண்ட்றியப்பட்டுள்ளது. சுமார் 60 பில்லியன் ரூபாவால் கடந்த வருடமும் சிகரெட் மூலம் அரசாங்கம் எதிர்பார்த்த வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த ஆண்டு சந்தை ஆய்வில் 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு சட்டவிரோத சிகரெட் பாவனை 33 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.