100 குடும்பக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள்..!
| | | |

100 குடும்பக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள்..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 100 குடும்பக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு  மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 100 குடும்பங்களுக்கு இவ்வாறு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் இந்த காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. குறித்த காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், பிரதேச செயலாளர் உட்பட அரச அதிகாரிகள் கலந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

சபாநாயகருக்கு எதிரான தீர்மானம்..!
| | | | |

சபாநாயகருக்கு எதிரான தீர்மானம்..!

சபாநாயகருக்கு எதிரான தீர்மானங்கள் பற்றி எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி தலைமையில் ஆக்கபூர்வமான கலந்துரையாடல் முன்னெடுக்கப்படவுள்ளதாக வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று (17) நடைபெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேய இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக  மேலும தெரிவிக்கையில், எதிர்க்கட்சியினர் தற்போது உள்ள அரசியல் சூழலை பயன்படுத்தி தமது இருப்பினைத் தக்க வைப்பதற்காக நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடாத்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். ஆளும்கட்சிக்குள் இருந்து சிறு பிரிவினர் நாடாளுமன்றத் தேர்தலை தான்…