யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்கள்..!
| | | |

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்கள்..!

யாழ்.சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட உணவகங்களில் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் திடீர் சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளனர். குறித்த சுற்றிவளைப்பில் 12 உணவகங்கள் மீது வழக்குத்தாக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில்  பண்டத்தரிப்பு பொதுச் சுகாதாரப்பரிசோசகர் ஆர்.ஜே.பிரகலாதன் 3 பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்து 69000 ரூபா தண்டப்பணம் விதித்துள்ளதோடு, ஆணைக்கோட்டை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் கு.பாலேந்திரகுமார் 09 உணவகங்களுக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கில் 86000 ரூபா தண்டப்பணமும் விதித்துள்ளார். அத்துடன்  இரு உணவகங்களை சீல் வைத்து மூடவும் மல்லாக நீதவான் தீர்ப்பளித்துள்ளமை…

டெங்கினால் இருவர் உயிரிழப்பு; யாழில் சம்பவம்
| | |

டெங்கினால் இருவர் உயிரிழப்பு; யாழில் சம்பவம்

யாழ் மாவட்டத்தில் கடந்த 11 மாதங்களில், 2,203 நோயாளர்க்ள் இனங்காணப்பட்டதுடன் இரண்டு மரணங்களும் பதிவாகியுள்ளன என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும், அவர் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் 110 நோயாளிகளும், ஒக்டோபர் மாதத்தில் 118 நோயாளிகளும் நவம்பர் மாதத்தில் 427 நோயாளிகளும் டிசம்பர் மாதத்தின் முதல் மூன்று நாட்களில் 82 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், நல்லூர் மற்றும் சண்டிலிப்பாய் ஆகிய இடங்க்ளில் நவம்பர் மாதத்தில் அதிக டெங்கு நோயாளர்கள் …