யாழில் பெண்னொருவர் மீது வாள்வெட்டு..!
| | | |

யாழில் பெண்னொருவர் மீது வாள்வெட்டு..!

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் பெண்ணொருவர் மீது நேற்றிரவு (19) வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் காயமடைந்த பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் காவல்துறையினால் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாள்வெட்டு நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மர்மமான முறையில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்
| | | |

மர்மமான முறையில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்

யாழ். கோப்பாய் பொலிஸ் நிலையத்தினுள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த உதயராஜ் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார். பொலிஸ் நிலையத்தின் அறையொன்றில்  அதிகாலை வேளை நேற்றைய தினம் (11) ஞாயிற்றுக்கிழமை சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஆரம்ப கட்ட விசாரணைகளில் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார் எனவும், உயிரிழப்புக்கான காரணம் தெரியவரவில்லை. என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழில். கசிப்பு உற்பத்தி செய்த தம்பதியினர் கைது..!
| | |

யாழில். கசிப்பு உற்பத்தி செய்த தம்பதியினர் கைது..!

யாழில் கசிப்பு உற்பத்தி செய்த தம்பதியினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை நடைபெற்று வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற பொலிஸார் தம்பதியினரை  நேற்றைய தினம் (03) கைது செய்ததுள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து15 லீட்டர் கசிப்பினையும், கசிப்பு உற்பத்தி செய்யும் பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக எமது பிராந்திய…

போதையற்ற இலங்கை;ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டம்
| | |

போதையற்ற இலங்கை;ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டம்

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் குழுக்களை  அழிக்கும்  விசேட வேலைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மூன்றாம்நாள் சுற்றிவளைப்புகளில் 2296 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் 6 மாதங்களுக்குள் போதைப்பொருள் அற்ற  நாட்டினை உருவாக்குவேன் என பொலிஸ் மா  அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். இதுவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 6,583 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இவற்றுள் செவ்வாய்க்கிழமை (19) இரவு புளுமெண்டல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் ஹெரோயின்,  ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்தமை,…