அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்..!
| | | |

அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்..!

இலங்கையில் உள்ள பல பொது நிறுவனங்களை தனியார் மயமாக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக  தேசிய வள பாதுகாப்பு இயக்கத்தினால்  இன்றைய தினம்(21) ஆர்ப்பாட்டம்  ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. கொழும்பு கோட்டை லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய வள பாதுகாப்பு இயக்கம் அறிக்கையொன்றின் மூலம் வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில்,“மின்சாரம், தொலைத்தொடர்பு, காப்பீடு, தபால் நிலையங்கள், ரயில்வே, வங்கிகள், விமான நிலையங்கள் மற்றும் பல முக்கிய பொது நிறுவனங்களை தனியார்மயமாக்கும் அரசாங்கத்தின் பொறுப்பற்ற…