கொழும்பில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!
| | | |

கொழும்பில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!

கொழும்பு – கொட்டாஞ்சேனை சுமித்ராராம மாவத்தையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 40 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேகநபரிடம் இருந்து 372 கிராம் ஹெரோயின் மற்றும் 1.5 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறு மீட்கப்பட்ட போதைப்பொருட்கள் இசைக்கருவிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்து: விசாரணைகள் தீவிரம்
| | | |

கொழும்பில் திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்து: விசாரணைகள் தீவிரம்

மட்டக்குளிய – இக்பாவத்தை (Mattakuleya) பகுதியில் சுற்றுலா சென்ற தனியார் பேருந்தொன்று இன்று அதிகாலை (03) திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. குறித்த பேருந்தின் சாரதி மற்றும் உதவியாளர் இருவரும் வீதியில் பேருந்தினை நிறுத்திவிட்டு தேநீர் அருந்த சென்ற போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கண்டி நோக்கிச்சென்ற சுற்றுலா பேருந்தே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளதாகவும், இதன்போது பேருந்தில் யாரும் இருக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது. இந்நிலையில், தீ விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.