இருமல் மருந்து விற்பனைக்கு தடை..!
| | | | |

இருமல் மருந்து விற்பனைக்கு தடை..!

6 ஆபிரிக்க நாடுகளில் இருமல் மருந்து விற்பனை செய்ய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமொன்றின் இருமல் மருந்தானது தென்னாப்பிரிக்கா, கென்யா, நைஜீரியா, ருவாண்டா, தான்சானியா உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. குறித்த இருமல் மருந்தை 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்துவந்துள்ளனர். இந்த நிலையில், மருத்துவர்களினால் பரிந்துரை செய்யப்பட்ட மருந்தை தொடர்ந்து அருந்தி வந்த குழந்தைகள் பலருக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதையடுத்து அந்த மருந்தை அந்தந்த…

உலக சாதனையாளர் உயிரிழப்பு..!
| | | | |

உலக சாதனையாளர் உயிரிழப்பு..!

ஆடவர் மரதன் ஓட்டப் போட்டியில் உலக சாதனை படைத்துள்ள கென்யாவைச் சேர்ந்த கெல்வின் கிப்டும் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். மேற்குக் கென்யாவில் நேற்று முன்தினம் (11) இடம்பெற்ற வீதி விபத்தில் 24 வயதான கெல்வின் கிப்டும் மற்றும் அவரது பயிற்சியாளரான ருவண்டா நாட்டைச் சேர்ந்த கர்வைஸ் ஹகிசமானாவும் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு சிக்காகோவில் நடைபெற்ற நெடுந்தூர ஓட்டத்தில் 42 கிலோமீற்றர் தூரத்தை ஒரு மணித்தியாலம் 35 விநாடிகளில் பூர்த்தி செய்து கெல்வின் கிப்டும் உலக சாதனை…

நைரோபியில் பாரிய எரிவாயு வெடி விபத்து.
| | | | |

நைரோபியில் பாரிய எரிவாயு வெடி விபத்து.

கென்யா தலைநகர் நைரோபியில் இடம்பெற்ற எரிவாயு வெடி விபத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 220க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் எம்பகாசி மாவட்டத்தில் எரிவாயுசிலிண்டர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த லொறி வெடித்து சிதறியதிலேயே இந்த இழப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் வீடுகள், வர்த்தக நிலையங்கள், வாகனங்கள், சேதமடைந்துள்ளதையும் தீவிபத்து பல தொடர்மாடிகளிற்கு பரவியுள்ளதால் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வெடிவிபத்துக்கள், தீப்பிளம்புகள், மேலும்  இடம்பெறலாம் என்ற அச்சத்தினால்  பொலிஸார் அந்த பகுதிக்குச் செல்வதை தவிர்க்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர் .