நாடு திரும்பிய குவைத்தில் பணியாற்றிய 26 இலங்கைப் பெண்கள்
விசா காலாவதியான நிலையில் குவைத்தில் பணிப்பெண்களாக பணியாற்றிய 26 இலங்கையர்கள் இன்று இலங்கை தூதரகத்தின் ஊடாக நாடு திரும்பியுள்ளனர். குவைத்தில் இதுபோன்று 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீட்டுப் பணிப்பெண்கள் உள்ளனர். அவர்களையும் குழுக்களாக நாட்டுக்கு அழைத்து வரப்படுவதாகவும் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இலங்கைத் தூதரக அதிகாரிகள் குவைத்தின் குடிவரவுத் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து இந்த வீட்டுப் பணியாளர்களுக்கு எதிரான வழக்குகளை மீளப் பெறவும், அவர்கள் செலுத்த…