தாமதமாகும் போர் நிறுத்தம்: உக்கிரமடையும் போர்
| | | |

தாமதமாகும் போர் நிறுத்தம்: உக்கிரமடையும் போர்

போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளின் விடுதலை அறிவிக்கப்பட்ட நிலையிலும் போர் நிறுத்தம் இன்னும் அமுலாகவில்லை. இன்றைய தினத்திற்கு (24) பிற்போடப்பட்ட நிலையிலும் காசாவில் நேற்றும் இஸ்ரேலிய படையினர் தாக்குதல்களையும் போர் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர். பணயக்கைதிகளின் விடுதலையுடன் இணைந்தே போர் நிறுத்தம் அமுல்படுத்தப்படுவதாக இஸ்ரேல் கூறிய நிலையிலும், அது இன்று (24) வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கை கடந்த புதன்கிழமை (22) காலையில் அறிவிக்கப்பட்டபோதும், ஒருநாள் கடந்துள்ள நிலையிலும் போர் நிறுத்தம் ஆரம்பமாகும் உத்தியோகபூர் நேரம் வெளியிடப்படவில்லை….

போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் உடன்பாடு
| | |

போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் உடன்பாடு

காசா மீதான தாக்குதல்களை சில நாட்களுக்கு நிறுத்த உடன்பட்டு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேல் சிறையில் உள்ள 150 பாலஸ்தீன பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுவிக்கப்படவுள்ளனர். இதற்கு பதிலாக ஹமாஸ் இயக்கத்தால் கடத்தப்பட்ட 50 இஸ்ரேலிய பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான யுத்தம் 4 நாட்களுக்கு நிறுத்தப்பட உள்ளது.

சரணடைந்தால் போரை நிறுத்துவேன் – இஸ்ரேல் பிரதமர்

சரணடைந்தால் போரை நிறுத்துவேன் – இஸ்ரேல் பிரதமர்

காசா பகுதியை ஆக்கிரமிக்கும் எண்ணம் இஸ்ரேலுக்கு இல்லை என்றும் , ஹமாஸ் அமைப்பினர் தோல்வியை ஏற்று சரணடைந்தால் மட்டுமே போர் நிறுத்தம் குறித்து பரிசீலிக்க முடியும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் காசா பகுதியைக் கட்டுப்படுத்தும் ஹமாஸ் அமைப்பை பலவீனப்படுத்தும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஹமாஸ் போராளிகளுக்கு எதிராக இஸ்ரேல் இராணுவம் வெற்றிகரமாக போரிட்டு வருகிறது. எனவே போர் நிறுத்தத்திற்கு செல்ல வேண்டிய…

இஸ்ரேல் – ஹமாஸ் போரை நிறுத்துங்கள் : ஈரான் ஜானாதிபதி
| |

இஸ்ரேல் – ஹமாஸ் போரை நிறுத்துங்கள் : ஈரான் ஜானாதிபதி

  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் உடனடியாக தலையிட்டு பலஸ்தீன மக்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஈரான் ஜனாதிபதி ரைசி, இந்தியப் பிரதமர் மோடியிடம் தொலைபேசி அழைப்பில் கலந்துரையாடும் போதே பின்வருமாறு கூரினார். தற்போது ஹமாஸ் போராளிகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய குண்டு தாக்குதல்களால் காசாவில் 10,000க்கும் மேற்பட்ட பலஸ்தீன பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நெருக்கடியில் இந்தியாவின் பங்கு முக்கியமானது எனவும், யூத இஸ்ரேல்…

இஸ்ரேலில் விவசாயிகள் பற்றாக்குறை – 10,000 இலங்கையர்கள் ஒப்பந்தம்
| |

இஸ்ரேலில் விவசாயிகள் பற்றாக்குறை – 10,000 இலங்கையர்கள் ஒப்பந்தம்

இஸ்ரேலின் குளோப்ஸ் நாளிதழ் செய்தியில் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஆரம்பமான காசா – இஸ்ரேல் போரினால் விவசாயத் துறைக்கு தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. போரினால் சுமார் 8,000 விவசாயத் தொழிலாளர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேறியதாகவும், தொடர்ந்து, 20,000 பலஸ்தீனிய விவசாயத் தொழிலாளர்கள் இஸ்ரேலுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் இஸ்ரேலில் விவசாயத் தொழிலாளர்களின் பாரிய பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது . இதற்காக 10,000 இலங்கைத் தொழிலாளர்களை அழைத்து வருவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் வெளியிட்டுள்ளது. இஸ்ரேலின் உள்விவகார அமைச்சர்…

உக்ரைனை மறந்த உலகம் – காரணம் காசா போர் !
| |

உக்ரைனை மறந்த உலகம் – காரணம் காசா போர் !

காசா- இஸ்ரேல் யுத்தத்தினால் உக்ரைன் மீதான உலக கவலையை மறந்துவிட்டதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸ்லென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான கவனத்தை ரஷ்யா பலவீனப்படுத்த விரும்புவதாகவும் , அனைத்தும் தங்கள் அதிகாரத்தின் கீழ் இருப்பதாகவும் வலியுறுத்தினார். ரஷ்யா தனது வான்வெளியை கட்டுப்படுத்தி வருவதாகவும், அந்த நிலையை மாற்ற, உக்ரைனுக்கு விரைவில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எப்-சிக்ஸ்டீன் போர் விமானங்கள் தேவை என்றும் உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மேலும், விமான எதிர்ப்பு ஆயுதங்கள் தேவை என்றும் அவர் கூறியுள்ளார். ரஷ்யாவுடன்…

காசாவை இரண்டாகபிரித்த இஸ்ரேல் :டேனியல் ஹகாரி
| |

காசாவை இரண்டாகபிரித்த இஸ்ரேல் :டேனியல் ஹகாரி

காசா மீது இஸ்ரேல் நடத்தும் தீவிர குண்டு தாக்குதலினால் இஸ்ரேலிய படைகள் ‘காசா நகரை சுற்றி வளைத்துள்ளன. இதன் காரணமாக தற்போது தெற்கு மற்றும் வடக்கு காசா என இரண்டாக பிரிவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த மாதம் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் தாக்குதல் நடத்தினர். இதைதொடர்ந்து, காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. ஹமாஸ் போராளிகளை ஒட்டு மொத்தமாக ஒழிப்போம் என்ற குறிக்கோலுடன் இஸ்ரேல் போரை தொடர்கின்றது. காசாவில்…