நண்பனின் உயிரை பலியெடுத்த  போதை..!
| | | |

நண்பனின் உயிரை பலியெடுத்த போதை..!

யாழ். தெல்லிப்பளை பகுதியில் போதை பாவனையில் இருந்து மீண்ட இளைஞனுக்கு அவரது நண்பர் மீண்டும் போதைப்பொருள் கொடுத்த நிலையில், குறித்த இளைஞன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. கடந்த 06 மாத காலமாகவே குறித்த இளைஞன்  போதைப் பொருள் பாவனையில் இருந்து மீண்டு, வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்றுமுன்தினம்(18)  நண்பனின் அழைப்பின் பேரில் வீட்டுக்கு அருகில் உள்ள இடத்திற்கு சென்ற போதே இளைஞனின் நண்பர்   போதை பொருளை  கொடுத்துள்ளார். இதனையடுத்து  மீண்டும் போதைப்பொருளை பாவித்தமையால், அதீத…

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை ஆரம்பம்..!
| | | |

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை ஆரம்பம்..!

எதிர்வரும் வாரங்களில் நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை ஆரம்பமாகும் என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ்ஜா நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், தலைமன்னார் மற்றும் ராமேஸ்வரம் இடையே பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்திய உயர்ஸ்தானிகர் காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் தலைமன்னார் கடற்பகுதிக்கு விஜயம் செய்த போது, இரு நாடுகளுக்கிடையிலான கப்பல் சேவைகளை துரிதமாக மீள ஆரம்பிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்துள்ளார். இதன் போது அவர் பங்கேற்ற பல்வேறு நிகழ்வுகள்,…

மீண்டும் ஆரம்பமாகவுள்ள இலங்கை – இந்திய கப்பல் சேவை
| | | | |

மீண்டும் ஆரம்பமாகவுள்ள இலங்கை – இந்திய கப்பல் சேவை

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான திட்டமிடப்பட்ட பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் தொடங்குவதன் மூலம் இரு நாடுகளுக்கிடையில்   பல நூற்றாண்டுகள் பழமையான கடல்சார் உறவுகள் புத்துயிர் பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இலங்கையின் காங்கேசன்துறையில் இருந்து தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் வரை இயக்கப்படும் பயணிகள் கப்பல் சேவை  பெப்ரவரி 15 முதல் மீண்டும் ஆரம்பமாக உள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்ட போதும் பல்வேறு காரணங்களால்…

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை
| | |

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்திற்கும் இன்று (22) விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி(01.02.2024) பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் முடிவடைகின்றன. இதன்படி, மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும்….

பண்டிகை காலத்தில் அதிகரிக்கும் பாதுகாப்பு
| | |

பண்டிகை காலத்தில் அதிகரிக்கும் பாதுகாப்பு

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர். அதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் ஏற்கனவே இரண்டு விசேட சுற்று நிருபங்களை வெளியிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். பொதுமக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் சிவில் உடையிலும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் தொடரும் கன மழை..!
| | |

நாட்டில் தொடரும் கன மழை..!

தீவின் பெரும்பாலான மாகாணங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்,வடக்கு, வடமத்திய, கிழக்கு, தெற்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடமேல் மாகாணத்தில் காலையிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ, தெற்கு, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர்…

கடற்படையினரின் இரத்த தான முகாம்
| |

கடற்படையினரின் இரத்த தான முகாம்

காங்கேசன்துறையில் “உத்தர” கடற்படை தள வைத்தியசாலையில் இரத்த தான நிகழ்வுகள் நடைபெற்றன. இது இலங்கை கடற்படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இன் நிகழ்வானது நடைபெற்றிருந்தது. அதனை தொடர்ந்து, 195 கடற்படையினர் மற்றும் தளபதிகள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வின் போது இரத்த தானம் வழங்கி இருந்தமை குறிப்பிடதக்கது.

வன்முறையில் ஈடுபட்ட வாள்வெட்டு கும்பல் கைது
| |

வன்முறையில் ஈடுபட்ட வாள்வெட்டு கும்பல் கைது

கடந்த திங்கட்கிழமை (04) யாழ்ப்பாணம்-தெல்லிப்பழை மற்றும் மல்லாகம் பகுதியில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக  இளைஞன் ஒருவர் மீது மர்ம கும்பல் ஒன்று  வாள் வெட்டு தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. அதன் பின்னர் ஹயஸ் ரக வாகனத்தில் காங்கேசன்துறை – யாழ்ப்பாண வீதியில் தப்பியோடி மல்லாகம் பகுதியில்  பொதுமக்கள் மீது வாள்களை காட்டி அச்சுறுத்தி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது   வன்முறை கும்பல் வாகனத்தில் ஏறி தப்பி ஓடியுள்ளனர் . தப்பியோடிய வாகனத்தை…

மறுஅறிவிப்பு வரை கடலுக்கு செல்ல வேண்டாம்
| |

மறுஅறிவிப்பு வரை கடலுக்கு செல்ல வேண்டாம்

கடும் காற்று, கடல் கொந்தளிப்பு, புயல் தொடர்பில், வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அபாய முன்னெச்சரிக்கை மையம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த வளிமண்டலத் தளம்பல் நிலை நேற்று இரவு 11.30 மணியளவில் 10.3°N அகலாங்கு மற்றும் 85.3°E நெட்டாங்குகளுக்கு அருகில் திருகோணமலையிலிருந்து வடகிழக்கே சுமார் 490 கி.மீ. தொலைவில் காணப்பட்டதாகவும், அது எதிர்வரும் 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை (03) அளவில் புயலாக உருவாகலாம் என,…