எயார் கனடா விமான சேவை நிறுவனம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு..!
| | | | |

எயார் கனடா விமான சேவை நிறுவனம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு..!

கனடாவின், ரொறன்ரோவிலிருந்து இஸ்ரேலின் தெல் அவீவிற்கு பயணம் செய்யவிருந்த விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிராந்திய வலயத்தில் நிலவி வரும் பதற்ற நிலையை கருத்திற் கொண்டு எயார் கனடா நிறுவனம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. எயார் கனடா விமானம் உள்ளுர் நேரப்படி நேற்றைய தினம் பிற்பகல் 4.25 மணிக்கு பியர்சன் விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்தது.எனினும் அரசாங்கத்தின் பாதுகாப்பு நடைமுறைகளின் அடிப்படையில் விமான சேவையை ரத்து செய்ததாக அறிவித்துள்ளது. பிராந்திய வலயத்தின் நிலைமைகளை கருத்திற் கொண்டு விமானப் பயணங்கள் தொடர்பில்…

கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் அதிரடியாக கைது..!
| | | | |

கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் அதிரடியாக கைது..!

கனடாவில் 43 வயதான தமிழர் ஒருவர் ரொரன்ரோ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சுரேஷ் நித்தியானந்தன்  என்ற நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். ரயில் நிலையத்திற்கு அருகில் பெண் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 30ஆம் திகதி ரயில் நிலையத்திற்கு அருகில் பெண் ஒருவரை கொடூரமாக தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபருக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

சுற்றுலா வந்த பெண்ணுக்கு அதிர்ச்சி..!
| | | |

சுற்றுலா வந்த பெண்ணுக்கு அதிர்ச்சி..!

கனடாவில்  இருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த பெண் ஒருவரை யானை தாக்கிய சம்பவம் ஒன்று நேற்றைய தினம்(02) பதிவாகியுள்ளது. குறித்த பெண் சிகிரியாவில் சூரிய உதயத்தை காண்பதற்கு  சென்ற வேளை அவரை யானை தாக்கியுள்ளது. அதனையடுத்து சுற்றுலா வழிகாட்டி தனது மோட்டார் சைக்கிளின் ஒலியை எழுப்பி பிரதான மின் விளக்கை பயன்படுத்தி காட்டு யானையை விரட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிகிரியா சுற்றுலா பயணச்சீட்டு அலுவலகத்துக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் யானையின் தாக்குதலுக்கு உள்ளான பெண் தம்புள்ளை …

கனடாவில் நோய்த்தாக்கம் மக்களுக்கு எச்சரிக்கை ..!
| | | |

கனடாவில் நோய்த்தாக்கம் மக்களுக்கு எச்சரிக்கை ..!

கனடாவில் தட்டம்மை நோய்த் தொற்று பரவுகை குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணத்தினால் நோயாளர் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக கனடாவின் பிரதம பொதுச் சுகாதார அதிகாரி டொக்டர் திரேசா டேம் தெரிவித்துள்ளார். மேலும்,நாடு முழுவதிலும் இந்த வருடம்,தட்டம்மை நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில்,  இந்த வருடம் மாத்திரம் நாட்டில் 40 தட்டம்மை நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். எனவே பெற்றோர்  தங்களது பிள்ளைகளுக்கு தடுப்பூசிகளை உரிய நேரத்தில் ஏற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது….

ஜனாதிபதி பதவிக்காலம் முடிவு அனுரகுமார வலியுறுத்து..!
| | | | |

ஜனாதிபதி பதவிக்காலம் முடிவு அனுரகுமார வலியுறுத்து..!

தேர்தல் நடத்தப்பட்டாலும் இல்லாவிட்டாலும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவிக்காலம் முடிவுக்கு வர வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார். கனடாவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டை தற்போதைய பாதையில் இருந்து விடுவிப்பதற்கான அரசியல் மாற்றத்தின் அவசியத்தை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 17 மற்றும் அக்டோபர் 17இற்கு இடையில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கனடாவில் உள்ள இலங்கையர்கள்…

கனேடிய மக்களுக்கு வானிலை ஆய்வு மையம்  எச்சரிக்கை..!

கனேடிய மக்களுக்கு வானிலை ஆய்வு மையம்  எச்சரிக்கை..!

கனடாவின் சில பகுதிகளுக்கு 50சென்ரிமீற்றர் வரை பனிப்பொழிவு அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, அல்பேர்ட்டா மாகாணத்தில் 10 முதல் 30 சென்ரிமீற்றர் பனிப்பொழிவு நீடிக்கும் என வானிலை மையத்தினால் எதிர்வுகூறப்பட்டுள்ளது. அத்தோடு, பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் பனிப்பொழிவு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் ஒன்றாரியோவிலும் பனிப்பொழிவு நிலைமை அவதானிக்க கூடிய மட்டத்தில் இருக்குமெனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என்றும் ஓட்டுநர்கள் தங்கள் விளக்குகளை இயக்கவும்,வாகனங்களுக்கிடையிலான பாதுகாப்பான தூரத்தை பராமரிக்கவும் நினைவூட்டப்படுகிறார்கள்.

கனடா செல்ல விரும்பாத இளைஞனின் விபரீத முடிவு..!
| | | |

கனடா செல்ல விரும்பாத இளைஞனின் விபரீத முடிவு..!

யாழ்ப்பாணத்தில் கனடாவுக்கு விசா கிடைத்தும் அங்கு செல்ல விரும்பாத இளைஞன் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார். தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த குறித்த நபர் கிணற்றில் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார். குறித்த நபரின் சகோதரி ஒருவர் கனடாவில் வசித்து வருகிறார். இந்நிலையில் இறந்த நபருக்கும், அவரது தாயாருக்கும் கனடாவுக்கான சுற்றுலா விசா கிடைத்துள்ளது. ஆனால் குறித்த நபருக்குக் கனடா செல்வதில் விருப்பம் இருக்கவில்லை. இந்நிலையில் அவர் தனது சக்கர நாற்காலியைக் கிணற்றுக்கு அருகே நிறுத்திவிட்டு கிணற்றில் பாய்ந்து…

அதிகம் படித்தவர்களை கொண்ட பட்டியல் வெளியானது..!
| | | |

அதிகம் படித்தவர்களை கொண்ட பட்டியல் வெளியானது..!

உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தில் உள்ளதுடன் அங்கு 59.96% படித்தவர்கள் காணப்படுகின்றனர். 56.7% கல்வி அறிவு கொண்டவர்களுடன் ரஷ்யா இரண்டாவது இடத்தினை பிடித்துள்ளது. முன்றாவது இடத்தினை ஜப்பான் பிடித்துள்ளதுடன் அங்கு 52.7% மான கல்வி கற்றவர்கள் காணப்படுகின்றனர். அதன்பின் நான்காவது இடத்தினை லக்சம்பர்க் பிடித்துள்ளதுடன் அந்நாட்டில் 51.3% படித்தவர்கள் இருப்பதாக பதிவாகியுள்ளது. மேலும் தென்கொரியா ஐந்தாவது இடத்தை பிடித்துள்ள நிலையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் 50.1%வீதத்தில் ஆறாவது இடத்தில் சமநிலையில் உள்ளன….

கனடாவில் கொலை செய்யப்பட்ட இலங்கை குடும்பம்
| | | | |

கனடாவில் கொலை செய்யப்பட்ட இலங்கை குடும்பம்

கனடாவின் தெற்கு ஒட்டாவாவிலுள்ள  பார்ஹேவன் புறநகரின் வீடொன்றில் இலங்கையை சேர்ந்த குடும்பத்தினரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலைசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன . குறித்த  சம்பவத்தில் தாயும் அவரது நான்கு பிள்ளைகள் மற்றும் வீட்டில் வசித்து வந்த 40 வயதுடைய ஆண் ஒருவரும்  உயிரிழந்துள்ளதுடன் குழந்தைகளின் தந்தை பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 5 பேர் இலங்கையிலிருந்து கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். அத்துடன் குறித்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் …

கனடாவுக்கு பறக்கவுள்ள அனுர..!
| | | |

கனடாவுக்கு பறக்கவுள்ள அனுர..!

மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் வாரம் கனடாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இதன் போது, கனடாவில் உள்ள புலம்பெயர் தமிழர்களையும் அவர் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பயணத்தின் போது கனடாவில் உள்ள அரசியல்வாதிகளை அவர் சந்திக்கவுள்ளதுடன், ரொரன்டோ பகுதியில் நடைபெறவுள்ள கூட்டமொன்றிலும் உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது