சுற்றுலா சென்ற குடும்பம்-கீழே விழுந்த குழந்தை   
| | | | |

சுற்றுலா சென்ற குடும்பம்-கீழே விழுந்த குழந்தை  

கித்துல்கல பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரு மாத குழந்தை ஒன்று தாய்க்கு தெரியாமல் வீதியில் விழுந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நீர்கொழும்பில் வசிக்கும் 2 குடும்பங்களை சேர்ந்தவர்கள் இரண்டு முச்சக்கரவண்டிகளில் கதிர்காமம் ஊடாக நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்த நிலையில் தாயும் தந்தையும் 6 , 3 வயதுடைய இரு பிள்ளைகள் மற்றும் ஒரு மாத குழந்தையுடன் பயணித்துள்ளனர். தாயின் மடியில் இருந்த  குழந்தை முச்சக்கரவண்டியில் இருந்து தவறி கீழே விழுந்ததுள்ளதுடன் சிறிது தூரம்…

 புதையல் தோண்டிய மூவர் கைது
| | |

 புதையல் தோண்டிய மூவர் கைது

திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் புதையல் தோண்டிக்கொண்டிருந்த மூவரை  பொலிஸார் இன்று(29) காலை கைது செய்துள்ளனர். தங்காலை பிரதேசத்தை சேர்ந்த கதிர்காமம் பிரதேச செயலகத்தின் உத்தியோகஸ்தர், ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த இராணுவ சிப்பாய் மற்றும் மதவெல பிரதேசத்தை சேர்ந்த மேசன் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட கதிர்காமம் பிரதேச செயலகத்தின் உத்தியோகஸ்தருக்கு சொந்தமான காணியொன்றிலேயே இவ்வாறு புதையல் தோண்டப்பட்டுள்ளது.