01கோடி ரூபா பெறுமதியான பொருட்களுடன் மூவர் கைது..!
| | | |

01கோடி ரூபா பெறுமதியான பொருட்களுடன் மூவர் கைது..!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து  சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய பொருட்களுடன் மூன்று பேர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது  கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மதுபான போத்தல்கள், சிகரெட்டுகள், Apple Smart கைப்பேசிகள், தொலைபேசி உதிரி பாகங்கள் உள்ளிட்ட பல மின்னணு சாதனங்களுடன் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மினுவாங்கொடை, மஸ்கெலியா மற்றும் கொழும்பு 13 பகுதிகளில் வசிக்கும் மூன்று பேரினால் இந்த பொருட்கள் இலங்கைக்குக் கொண்டு…

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுதலை..!
| | | |

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுதலை..!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 33 ஆண்டுகள் வரையில் சிறையில் இருந்த முருகன், ரொபட் பாயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய அனைவரும் 2022 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட நிலையில், திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். இதனையடுத்து  இன்று குறித்த மூவரும்  நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர். இன்று காலை 11:30 மணியளவில்   கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு இவர்கள் மூவரும் வந்தடைவார்கள் என முருகன் சார்பில் வழக்காடிய சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில்,குறித்த மூவரையும் விரைவில் இலங்கைக்கு அனுப்ப…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்றம்..!
| | | | |

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்றம்..!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று(15) அதிகாலை 65 வயதுடைய வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். CX 610 என்ற விமானத்தில் ஹொங்காங்கில் இருந்து இன்று அதிகாலை 1.30 மணியளவில் இலங்கை வந்த வெளிநாட்டு பயணி ஒருவருக்கு விமான நிலையத்தில் திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து உடனடியாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது பயணி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுளது.

20 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுக்கள் மீட்பு
| | |

20 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுக்கள் மீட்பு

இருபது இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளை சட்ட விரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவந்த வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். தங்காலை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடை  நபர் ஓமானில் இருந்து குறித்த சிகரெட்டுக்களை இலங்கைக்கு கொண்டு வர முயன்ற வேளையிலே இவ்வாறு கட்டுநாயக்க சுங்க அதிகாரிகளால் இன்று சனிக்கிழமை (6) கைது செய்யப்பட்டுள்ளார். 20 இலட்சம் ரூபா பெறுமதியான சிகிரெட்டுக்களை மிகவும் தந்திரோபாயமாக இரண்டு பயணப்பொதிகளில் மறைத்துக் வைத்திருந்த நிலைமையில் குறித்த சதேக…

பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை – சட்ட விரோத பொருட்கள் மீட்பு
| | | |

பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை – சட்ட விரோத பொருட்கள் மீட்பு

தீர்வை வரி செலுத்தப்படாத ஒரு தொகைப்  பொருட்களுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக விமான நிலையப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். களனி, புத்தளம், கொலன்னாவை மற்றும் வீரகெட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். மறைத்து வைத்து வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒரு தொகை பொருட்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போது குறித்த பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதில், மடிகணினிகள், அப்பிள் கையடக்க தொலைபேசிகள்,…

வாக்குமூலத்திற்காக CID இல் ஆஜரான ஜெரோம் பெர்னாண்டோ
| | | |

வாக்குமூலத்திற்காக CID இல் ஆஜரான ஜெரோம் பெர்னாண்டோ

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுப் பிரிவில் இன்று (30) காலை ஆஜராகியுள்ளார். பௌத்த மதத்திற்கு அவமரியாதையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு சிங்கப்பூர் சென்ற அவர், நேற்று (29) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். சிங்கப்பூர் சென்ற போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை கைதுசெய்யுமாறு உத்தரவிட்டிருந்த நீதிமன்றம், பின்னர் அவர் இலங்கை வரும் போது கைதுசெய்ய வேண்டாமெனவும் நாட்டுக்கு வருகை தந்து 48 மணிநேரத்தில் அவர் வாக்குமூலமொன்றை வழங்க வேண்டுமென்றும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், போதகர் ஜெரோம்…