வெளிநாட்டில் மனைவி – கொழும்பில் கணவன் எடுத்த விபரீத முடிவு..!
| | | |

வெளிநாட்டில் மனைவி – கொழும்பில் கணவன் எடுத்த விபரீத முடிவு..!

கொழும்பின் புறநகர் பகுதியான ஒருகொடவத்தை பிரதேசத்தில் வசித்து வந்த 2 பிள்ளைகளின் தந்தையொருவர் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார். 25 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வெளிநாட்டில்  மனைவி இருந்துவந்த நிலையில் அவருடன் ஏற்பட்ட  தகராறு காரணமாகவே குறித்த நபர்  வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். மேலும் பொருளாதார நெருக்கடி காரணமாக கணவன் – மனைவிக்கு இடையே தொடர்ந்து தகராறு இடம்பெற்றுள்ளதாக  பொலிஸ் விசாரணையில்  தெரியவந்துள்ளது.