சார்ஜாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை..!
| | | |

சார்ஜாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை..!

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் சார்ஜா நகரில் புத்தாண்டுக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை பொலிஸார் அறிவிப்பு ஒன்றையும் விடுத்திருந்தனர். அதில் அனைத்து நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் இந்த தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது போரினால் பாதிக்கப்பட்ட காஸாவிலுள்ள பலஸ்தீனியர்களுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்த எடுக்கப்பட்ட தீர்மானம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விதியை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.