தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரானார் சிவஞானம் சிறீதரன்
| | | |

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரானார் சிவஞானம் சிறீதரன்

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கான புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களின் அதிக வாக்குகளால் இன்றைய தினம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை நகரசபை மண்டபத்தில் வைத்தியர்.ப.சத்தியலிங்கத்தின் தலைமையில்  இன்று  இதற்கான இரகசிய வாக்கெடுப்பு நடைப்பெற்றது. சிறிதரனுக்கு ஆதரவாக 184 வாக்குகளும் சுமந்திரனுக்கு ஆதரவாக 137வாக்குகளும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழரசுக்கட்சியின் தலைவர் தேர்தல் முடிவில் திடீர் மாற்றம்
| | | |

தமிழரசுக்கட்சியின் தலைவர் தேர்தல் முடிவில் திடீர் மாற்றம்

தமிழ்த்தேசியத்தில் உறுதிக்கொண்ட தலைவர் ஒருவரை நியமிப்பதில் சுமந்திரனின் ஆதரவாளர்களின் முடிவில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை பிரதேசத்தில் இருக்கக்கூடிய இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளை தலைவர் தவராசா சர்ஜீன் தொலைக்காட்ச்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  போதே இந்த விடயத்தை கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்தேசியத்தின்பாலுள்ள பற்றுறுதியை கொண்டு செயற்படும் ஒருவரை நியமிப்பதிலே உறுப்பினர்கள் தீவிரமாக உள்ளனர். அந்த வகையில், வாக்கெடுப்பிற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களை பொறுத்தமட்டில் தமிழ்தேசியத்தின்பாலுள்ள பற்றுறுதியை கொண்டு செயற்படும்…

தமிழரசுக் கட்சி தலைமை தெரிவுக்கு இரகசிய வாக்கெடுப்பு நடார்த்த முடிவு
| | | |

தமிழரசுக் கட்சி தலைமை தெரிவுக்கு இரகசிய வாக்கெடுப்பு நடார்த்த முடிவு

இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் பதவிக்காக போட்டியிடும் மூவரும் விட்டுக்கொடுப்பு இல்லாததால் இரகசிய வாக்கெடுப்பு நடத்தி தலைவரை தெரிவு செய்வதென நேற்று(11) முடிவுசெய்யப்பட்டுள்ளது. இப்பதவிக்கு போட்டியிடும் பாராளுமன்ற உறுப்பினர்களான சி. சிறிதரன், எம்.ஏ. சுமந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பியோகேஷ்வரன் மூவரும் நேற்று (11) மு.ப. 10.45 மணிக்கு மாதிவெல, சிறிதரனின் விடுதியில் கூடி பேசியுள்ளனர். புதிய தலைமைப் பதவிக்கு போட்டியிடும் எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன், சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோர் கூடிப்பேசுவதற்குநேற்று முன்தினம் இணக்கப்பாடு எட்டப்பட்டது. இதற்கென,…

இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு ஜனவரியில்
| | | |

இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு ஜனவரியில்

இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு ஏற்கனவே திட்டமிட்டபடி இடம்பெறும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் எதிர்வரும் 2024 ஜனவரி 21 ஆம் திகதி பொதுச் சபை கூடவுள்ளது. இதன் போது புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகளை தெரிவு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், 26 ஆம் திகதி மத்திய செயற்குழு கூடவுள்ளது 27ம் திகதி பொதுக்கூட்டம் இடம்பெற உள்ளது. அதற்கு அடுத்த நாளான 28 ஆம் திகதி இலங்கை தமிழரசு…

இமாலய உடன்படிக்கைக்கும் தமிழரசுக்கட்சிக்கும் எவ்வித தொடர்புமில்லை..!
| | |

இமாலய உடன்படிக்கைக்கும் தமிழரசுக்கட்சிக்கும் எவ்வித தொடர்புமில்லை..!

இமாலய உடன்படிக்கைக்கும்  ஜனாதிபதிக்கும் இடையிலோ அல்லது  தமக்கும் இடையிலோ எவ்வித தொடர்புமில்லை என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் நேற்று முன்தினம் (13) ஊடகசந்திப்பில்  தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், உலகத்தமிழர் பேரவையும், புத்த பிக்குகளும் இணைந்து நடத்திய பேச்சுவார்ததைகளின் நீட்சியாக, அதனை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டதொரு செயற்திட்டமே இந்த உடன்படிக்கையாகும் என தெரிவித்தார். இவ் உடன்படிக்கையினை முற்றாக நிராகரித்தும், உலகத்தமிழர் பேரவையின் செயற்பாட்டைக் கண்டித்தும் நேற்று முன்தினம் கருத்து வெளியிட்டிருக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின்…