சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில்  10,000 முறைப்பாடுகள்..!
| | | |

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 10,000 முறைப்பாடுகள்..!

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் கடந்த வருடத்தில், சுமார் 10 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின்  சிரேஷ்ட விரிவுரையாளர்  உதய குமார அமரசிங்க   தெரிவித்துள்ளார். மேலும் கடந்த வருடம்  சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு 9,434 முறைப்பாடுகளும்  சிறுவர்கள் சித்திரவதைக்குள்ளானது தொடர்பில்  2242 முறைப்பாடுகளும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 472 முறைப்பாடுகளும் சிறுவர்களை பாலியல் உபாதைக்கு உட்படுத்தியமை தொடர்பில் 404 முறைப்பாடுகளும் பெண் பிள்ளைகளின் துஷ்பிரயோகம் தொடர்பில் 51 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன…