தமிழர் பகுதியில் கிணற்றுக்குள் இருந்து வரும் மண்ணெண்ணெய்!
| | |

தமிழர் பகுதியில் கிணற்றுக்குள் இருந்து வரும் மண்ணெண்ணெய்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார்கட்டு குரவில் கிராமத்தில் கிணற்றுக்குள் இருந்து கிணற்று நீருடன் மண்ணெண்ணெய் வெளியேறி வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த விடயம் நேற்று (07) கண்டறியப்பட்டுள்ளதாக உடையார் கட்டு கிராம சேவையாளர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குரவில் கிராமத்தில் வசிக்கும் குடும்பம் ஒன்று மழை வெள்ளத்தினால் கிணறுக்குள் வெள்ள நீர் நிரம்பியுள்ள நிலையில் கிணற்றினை சுத்தம் செய்வதற்காக நீர் இறைக்கும் இயந்திரம் கொண்டு இறைத்துள்ளார்கள். இதன்போது கிணற்று நீருடன் மண்ணெண்ணெய் கலந்திருப்பது…