இன்னும் இரண்டு நாட்கள் நீடிக்கும் போர் நிறுத்தம் – கட்டார் அறிவிப்பு
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்தம் மேலும் இரண்டு நாட்கள் நீடிப்பதற்கு இரு தரப்பும் இணங்கியுள்ளன. நான்கு நாட்கள் போர் இடைநிறுத்தம் நடைமுறைபடுத்தப்பட்டு முடிவிற்கு வருவதற்கு சற்று முன்னர் கட்டார் இந்த அறிவிப்பை அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து மூன்று வயது சிறுவன் உட்பட 11 பணயக்கைதிகளையும் சேர்த்து ஹமாஸ் 50 பணயக்கைதிகளையும் விடுதலை செய்துள்ளது. இதேவேளை, 30 சிறுவர்கள் மூன்று பெண்கள் உட்பட 33 பலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.