ஜப்பானை தாக்கிய பூகம்பத்தில் உயிரிழப்பு 48 ஆக அதிகரிப்பு
| | | | |

ஜப்பானை தாக்கிய பூகம்பத்தில் உயிரிழப்பு 48 ஆக அதிகரிப்பு

புத்தாண்டு தினத்தில் மத்திய ஜப்பானின் கடற்கரையை தாக்கிய பூகம்பத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. இஷிகாவா மாகாணத்தில் நோட்டோ தீபகற்பத்திற்கு அருகில் கடந்த 01ம் திகதி நண்பகலில் இடம்பெற்ற 7.6 ரிச்டர் அளவிலான பூகம்பத்தை அடுத்து சில பகுதிகளில் 1 மீற்றர் அளவு சுனாமி அலை தாக்கியுள்ளது. இச் சம்பவத்தால் பரந்த அளவில் சேதங்கள் ஏற்பட்டிருப்பதாகவும், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடுமென  ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.