எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி
| | |

எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மாத்தளை மாவட்ட பிராந்திய அரசியல் அதிகார சபையுடனான சந்திப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று முன்தினம் (25) மாத்தளை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “இந்தப் பொருளாதார முறையை மாற்ற வேண்டும், இல்லையெனில் இன்னும் 5-6 வருடங்களில் இந்தப் பொருளாதார பிரச்சினைகள் அதிகரித்து இந்த…

நாட்டில் இன்றும் மழையுடன் கூடிய வானிலை
| | | |

நாட்டில் இன்றும் மழையுடன் கூடிய வானிலை

மத்திய, சப்ரகமுவ, மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களில் பல இடங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை…

இன்றும் பல பகுதிகளில் பிற்பகல் மழை
| | | |

இன்றும் பல பகுதிகளில் பிற்பகல் மழை

இன்றையதினம் (23) மாலை வேளையில் நாட்டின் பல பகுதிகளிலும் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் மத்திய, சப்ரகமுவ, ஊவா, தென், மேல் மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீ. அளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு…

மிக இளவயது தமிழ் பெண் நீதிபதி; சாதனை புரிந்த யாழ். பெண்
| | |

மிக இளவயது தமிழ் பெண் நீதிபதி; சாதனை புரிந்த யாழ். பெண்

இலங்கை நீதித்துறை வரலாற்றில் மிக இளவயதில் நீதிபதியாக வட மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் தெரிவாகியுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாதுரி நிரோசன் என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். எதிர்வரும் முதலாம் திகதி தனது 31வது வயதில் இவர் நீதிபதியாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார். நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நீதிபதிகளுக்கான போட்டியில், அகில இலங்கை ரீதியில் 12 ஆவது இடத்தை பிடித்துள்ளார். இவர் யாழ்ப்பாணம் சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரியின் பழைய மாணவியும் ஆவார். இளம் வயதில் நீதிபதியாக தெரிவாகி…

தவறவிடபட்ட உலக கிண்ண வாய்ப்பு
| |

தவறவிடபட்ட உலக கிண்ண வாய்ப்பு

2024 ஆம் ஆண்டில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணம் இலங்கையில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இலங்கை கிரிக்கெட்டில் நிலவும் நிர்வாக நிச்சயமற்ற தன்மை காரணமாக இலங்கை இந்த வாய்ப்பை இழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கமைய தொடரை நடாத்தும் வாய்ப்பை இலங்கையிடம் இருந்து தென்னாப்பிரிக்காவுக்கு மாற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தீர்மானித்துள்ளது. நேற்று இந்தியாவின் அஹமதாபாத்தில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டத்தின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை விபத்தில் உயிரிழந்த சிறுமி – வெல்லம்பிட்டியில் சம்பவம்
| |

பாடசாலை விபத்தில் உயிரிழந்த சிறுமி – வெல்லம்பிட்டியில் சம்பவம்

வெல்லம்பிடிய பகுதியில் குடிநீர் குழாய் பொறுத்தப்பட்டிருந்த சுவர் இடிந்து விழுந்ததில் ஆறு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். வெல்லம்பிட்டி – வெரகொட கனிஷ்ட வித்தியாலயத்திலேயே குறித்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.   மேலும், இந்த விபத்தில் ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்தில் ஆறு வயதுடைய செஹன்சா என்ற சிறுமியியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சிறுமியின் தாயார் வெளிநாட்டில் பணி புரிந்து வரும் நிலையில், பாட்டி மற்றும் சித்தியின் அரவணைப்பிலேயே சிறுமி இருந்துள்ளார். நேற்றைய தினம் தன்னுடைய…

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
| |

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும்,  வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறப்படுகிறது. மேற்கு மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்யுமென…

ரவூப் ஹக்கீமின் கேள்விகளுக்கு அரசாங்கம் பதில் கூறுமா?
|

ரவூப் ஹக்கீமின் கேள்விகளுக்கு அரசாங்கம் பதில் கூறுமா?

2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாடாளுமன்றில் இடம்பெற்றுவருகின்றது. இதில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் வரவு செலவு திட்டத்தின் மீது பல கேள்விகளை எழுப்பியுள்ளார். நேற்றைய தினம் ஜனாதிபதி வரவு செலவு திட்டத்தில் பல யோசனைகளை முன் வைத்திருந்திருந்தார். இந்நிலையில், அதனை நடைமுறைப்படுத்த முடியுமா என்பதே எமது கேள்வியாக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், கடந்த வருடம் அரசாங்கத்தினால்…

சாம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் இருந்து வெளியேறியது இலங்கை
|

சாம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் இருந்து வெளியேறியது இலங்கை

2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான தகுதி பெற்ற அணிகளின் விபரங்களை ஐ . சி . சி வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு சர்வதேச ஒருநாள் உலகக்கிண்ண போட்டியில் பங்குபற்றிய இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் தவிர்ந்த ஏனைய 8 அணிகளும் இந்த போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த தொடரை நடாத்தும் பாகிஸ்தான் அணியுடன் சேர்த்து, நடப்பு உலகக் கிண்ண தொடரில் முதல் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 7 இடத்தைப் பெறும் அணிகளை சேர்த்து…

78வது வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில்
|

78வது வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில்

இந்நாட்டின் 78வது வரவு செலவுத் திட்டமான 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நேற்று நண்பகல் 12.00 மணிக்கு நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படடது. 2024 ஆம் ஆண்டிற்கான மதிப்பிடப்பட்ட அரசாங்கச் செலவு 7,326 பில்லியன் ரூபாவாகும். தொடர்ச்சியான செலவுகள் அல்லது மானியங்கள் மற்றும் சம்பளம் போன்ற செலவுகளுக்காக 5,334 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்படவுள்ளது. மூலதனச் செலவு அல்லது புதிய திட்டங்கள் அல்லது ஏற்கனவே உள்ள திட்டங்களுக்கான செலவு 1,225 பில்லியன்…