திறைசேரி உண்டியல்கள்  ஏலத்தில். !!
| | | |

திறைசேரி உண்டியல்கள்  ஏலத்தில். !!

160,000 மில்லியன் ரூபா திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை  எதிர்வரும் ஜனவரி மாதம் 3  திகதி ஒரு இலட்சத்து அறுபதாயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள்  ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி  அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 40 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 70 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக்…

திடீரென அதிகரித்த இலங்கை ரூபாவின் பெறுமதி
| | | |

திடீரென அதிகரித்த இலங்கை ரூபாவின் பெறுமதி

நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றையதினம் (30) இலங்கை ரூபாவின் பெறுமதியில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (30) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 333.45 ரூபாவாகவும், கொள்வனவு விலை 323.46 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 247.13 ரூபாவாகவும், கொள்வனவு விலை 236.02 ரூபாவாகவும் பதிவாகியுள்ள நிலையில், யூரோ ஒன்றின் விற்பனை விலை 367.62 ரூபாவாகவும், கொள்வனவு விலை 353.09 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அதேசமயம், ஸ்டெர்லிங் பவுணின் இன்றைய விற்பனை விலை 425.03 ரூபாவாகவும், கொள்வனவு விலை 409.10 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இரண்டு இலட்சத்தை நெருங்கும் தங்கத்தின் விலை
| | | |

இரண்டு இலட்சத்தை நெருங்கும் தங்கத்தின் விலை

நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் (30) தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சியேற்பட்டுள்ளது. இதன் படி, இலங்கை மத்திய வங்கி இன்றைய தினத்திற்கான தங்கத்தின் விலைகளை வெளியிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைப்படி, 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 190,150 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,770 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கத்தின் இன்றைய விலை பவுணொன்றிற்கு 174,350 ரூபாவாகவும் ஒரு கிராமின் விலை 21,790 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. மேலும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,800 ரூபாவாகவும் பவுணொன்றின் விலை…