இந்தோனேசியாவில் நில நடுக்கம்!
| | | |

இந்தோனேசியாவில் நில நடுக்கம்!

இந்தோனேசியாவின் மேற்கு பப்புவா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கமானது நேற்று காலை 7 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானதாகவும், பனிச்சரிவு எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பப்புவா மாகாணத்தின் ரான்சிகி நகரை மையமாக கொண்டு 11 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

இலவச வீசா திட்டம்..!
|

இலவச வீசா திட்டம்..!

7 நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டம் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அவரது உத்தியோகபூர்வ X தளத்தில்  குறிப்பிட்டுள்ளார். மேலும் சீனா, இந்தியா, ரஷ்யா, தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச சுற்றுலா விசா வழங்கும் திட்டம் முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்பட்டமை குறிப்பிடதக்கது.

வெற்றி பெற்றது அவுஸ்திரேலிய  அணி
| | | | |

வெற்றி பெற்றது அவுஸ்திரேலிய அணி

2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண காற்பந்தாட்டத் தொடரின் நேற்றைய தினம் (28)  2 போட்டிகள் நடைபெற்றிருந்தன. அதில் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் அவுஸ்திரேலியா அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இதில் அவுஸ்திரேலியா அணி சார்பாக மார்டின் பொய்லி மற்றும் கிரைக் கூட்வின் ஆகியோர் முறையே 45 மற்றும் 89 ஆவது நிமிடங்களில் ஒரு கோலை பெற்றனர். மேலும், ஹரி சோட்டர் மேலதிக ஆட்டநேரத்தின்…

2023 ஆம் ஆண்டுக்கான ஆசியகிண்ண காற்பந்தாட்ட தொடர்
| | | |

2023 ஆம் ஆண்டுக்கான ஆசியகிண்ண காற்பந்தாட்ட தொடர்

கடந்த வெள்ளிகிழமை கட்டாரில் ஆரம்பமாகி நடைபெற்றுவரும் 2023 ஆம் ஆண்டுக்கான ஆசியகிண்ண காற்பந்தாட்ட தொடரில் நேற்றைய தினம் 3 போட்டிகள் நடைபெற்றிருந்தன. முதல் போட்டியில் தென் கொரியா மற்றும் பஹ்ரைன் அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் தென் கொரியா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியிருந்தது. தென் கொரியா சார்பாக இன் பியூம் ஹ்வாங் ஒரு கோலையும், கங் இன் லீ 2 கோல்களையும் பெற்றனர். பஹ்ரை அணிக்கு அப்துல்லாஹ் அல் ஹஸாஸ் ஒரு கோலையும் பெற்றுக் கொடுத்தார்….

இந்தோனேசியாவில் இரண்டாவது முறையாக வெடித்துச் சிதறும் எரிமலை
| | | |

இந்தோனேசியாவில் இரண்டாவது முறையாக வெடித்துச் சிதறும் எரிமலை

இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவில் உள்ள மராபி மலையில் இரண்டாவது முறையாக நேற்றைய தினம் (14) அதிகாலை 6.21 மணியளவில்  எரிமலை வெடித்துள்ளது. மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய எரிமலைக்குழம்புகளின் அச்சுறுத்தல் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எரிமலை ஆய்வு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எரிமலையில் இருந்து தீக்குழம்பு வெளியேறியதால் அருகில் உள்ள கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  இதனால் அங்குள்ள 150 இற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் மக்களுக்கு எரிமலை சாம்பலால் ஏற்படும் சுவாச நோய்த்…

இந்தோனேசியாவில் ரயில்கள் மோதி விபத்து
| | | |

இந்தோனேசியாவில் ரயில்கள் மோதி விபத்து

இந்தோனேசிய ஜாவாதீவில் இன்று (05) இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி பல பெட்டிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் உயிரிழந்துள்ளதோடு,  28 பேர் காயமடைந்ததாக  சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இந்த ரயில் விபத்து மேற்கு ஜாவாவின் பாண்டுங் நகரில் உள்ள சிகாலெங்கா ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ளூர் நேரப்படி காலை 6:03 மணிக்கு விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இரண்டு ரயில்களிலும் பயணித்த பயணிகளை கவனமாக மீட்கப்பட்டுள்ளதோடு, விபத்துக்கான காரணம்…

மெராபி எரிமலை வெடித்துச் சிதறியதில் 11 பேர் பலி
| | |

மெராபி எரிமலை வெடித்துச் சிதறியதில் 11 பேர் பலி

இந்தோனேசியாவின் மேற்கு சுமாத்ரா தீவிலுள்ள  மெராபி எரிமலை ஞாயிற்றுக்கிழமை (03) வெடித்து சிதறிய போது  75 பேர் அப்பகுதியில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 11 மலையேறும் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அத்தோடு, 12 பேரை காணவில்லை என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், படாங் தேடல் மற்றும் மீட்பு முகாமைத்துவத்தின்  தலைவர் அப்துல் மாலிக் குறித்த பகுதியிலிருந்து வெளியேற முடியாமல்  இருந்த 26 பேரில் 3 பேர்  உயிருடன் மீட்கப்பட்டு 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். எரிமலை…