மீட்கப்பட்ட சுரங்கத் தொழிலாளர்கள்;அர்னால்ட் டிக்ஸிற்கு குவியும் வாழ்த்து
இந்தியாவின் உத்திரகண்ட் மாநிலத்தில் சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் எவ்வித ஆபத்தும் இன்றி மீட்கப்பட்டுள்ளனர். உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஏராளமான மீட்பு குழுவினரின் உதவியுடன் இவர்கள் கடந்த செவ்வாய்க் கிழமை (28) மீட்கப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பேராசிரியர் அர்னால்ட் டிக்ஸும் இந்த மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தார். சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச சுரங்கப்பாதை மற்றும் நிலத்தடி கூட்டமைப்பின் தலைவராக செயற்படும் இவர் கட்டுமான ஆபத்துகள், பாதுகாப்பு செயல்திறன் தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்கள் ஆகியவற்றில்…