கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்ட தமிழ் இளைஞன் ..!
| | | |

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்ட தமிழ் இளைஞன் ..!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து திருகோணமலையைச் சேர்ந்த 27  தமிழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் போலியான ஆவணங்கள் மூலம் இத்தாலி செல்ல முற்பட்ட வேளையில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞனின் ஆவணங்கள் பரிசோதனை செய்த போது போலியான இலங்கை கடவுச்சீட்டு மற்றும் விமான டிக்கெட்டை பயன்படுத்தியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு…

உலகிலேயே மிக மெதுவாக வாகனங்கள் இயக்கப்படும் நகரம் 
| | | |

உலகிலேயே மிக மெதுவாக வாகனங்கள் இயக்கப்படும் நகரம் 

உலகிலேயே வாகனங்கள் மிக மெதுவாக இயக்கப்படும் நகரமாக லண்டன் பதிவாகியுள்ளது. இதன்படி, மத்திய லண்டனில் 10 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க 37 நிமிடங்கள் 20 நொடிகள் ஆகுமென கூறப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள 55 நாடுகளில் 387 நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் மையத்தில் மணிக்கு 50 மைல் தாண்டி வாகனங்களை இயக்க முடியாது எனவும், வாகனத்தை வேகமாக இயக்கக் கூடிய கட்டமைப்பு குறித்த பகுதியில் இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. லண்டனுக்கு அடுத்தபடியாக…

இத்தாலியில் தானம் செய்யப்பட்ட இலங்கையரின் உடலுறுப்புகள்
| | | |

இத்தாலியில் தானம் செய்யப்பட்ட இலங்கையரின் உடலுறுப்புகள்

இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மூளைச்சாவடைந்த இலங்கையர் ஒருவரின் உடலுறுப்புகள் அந்நாட்டில் உள்ள நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளன. ஷமில பெர்னாண்டோ என்ற 35 வயதுடைய நபரின் உடல் உறுப்புகளே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது. அவரது மனைவி, தாய் மற்றும் இரு சகோதரர்களின் அனுமதியுடனேயே அவரது உடலுறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. அதற்கமைய, அவரின் இரண்டு சிறுநீரகங்கள், இதயம், கல்லீரல், நுரையீரல் மற்றும் இரண்டு கண்கள் ஆகியன இவ்வாறு தானம் செய்யப்பட்டுள்ளன. இவரது மனைவி…