பாடசாலை மாணவி பரிதாப மரணம்..!
| | | |

பாடசாலை மாணவி பரிதாப மரணம்..!

புத்தளம் – ஆனமடுவ பகுதியில் பாடசாலைக்கு முன்பாக வீதியை கடக்க முயன்ற  போது, லொறி மோதி மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆனமடுவ – ரதனபால தேசிய பாடசாலையில் 8ஆம் தரத்தில் கல்வி கற்கும் ஈக்ஷனா காயத்மி என்ற 13 வயது மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவி பாடசாலையில் அகில இலங்கை நடனப் போட்டிக்கான பயிற்சியில் கலந்துகொண்ட பின்னர், வீட்டுக்குச் செல்வதற்காக பேருந்தில் ஏறுவதற்கு நடைபாதை வழியாக ஓடி வந்த போதே இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

புத்தளத்தில் வர்த்தகர் ஒருவர் சடலமாக மீட்பு.
| | |

புத்தளத்தில் வர்த்தகர் ஒருவர் சடலமாக மீட்பு.

புத்தளத்தில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் நேற்று அவரின் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அங்கம்மன – வேம்புவெவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சானக திஸாநாயக்க என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த வர்த்தகர் தனது வீட்டின் மேல் மாடியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று பாடசாலை முடித்து வந்த பிள்ளைகள் தந்தை வீட்டில் இல்லாத நிலையில் தேடிய போதே, இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்….