தவறவிடபட்ட உலக கிண்ண வாய்ப்பு
| |

தவறவிடபட்ட உலக கிண்ண வாய்ப்பு

2024 ஆம் ஆண்டில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணம் இலங்கையில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இலங்கை கிரிக்கெட்டில் நிலவும் நிர்வாக நிச்சயமற்ற தன்மை காரணமாக இலங்கை இந்த வாய்ப்பை இழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கமைய தொடரை நடாத்தும் வாய்ப்பை இலங்கையிடம் இருந்து தென்னாப்பிரிக்காவுக்கு மாற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தீர்மானித்துள்ளது. நேற்று இந்தியாவின் அஹமதாபாத்தில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டத்தின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.