விசா கட்டுப்பாடுகளை இறுக்கமாக்கும் அவுஸ்திரேலியா
| | |

விசா கட்டுப்பாடுகளை இறுக்கமாக்கும் அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவிற்குள் வரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை அடுத்த இரண்டு வருடங்களிற்குள் அரைவாசியாக குறைக்கவுள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ள குடிவரவு அமைப்பினை சரிசெய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளார் ஒ நெய்ல் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களிற்கான விசா கட்டுப்பாடுகளை இறுக்கமாக்கவுள்ளதாகவும் இதேவேளை, தொழிலாளர்களிற்கு பற்றாக்குறை நிலவும் நிலையில் அவர்களை கவர்ந்திழுக்கும் விடயத்தில் அரசாங்கம் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும் அல்பெனிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. 2023 இல் ஜூன் மாதம் வரை 5,10,000 குடியேற்றவாசிகள் அவுஸ்திரேலியா சென்றுள்ளதாக…