அரசாங்க வேலை வாய்ப்புக்காக  காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு
| | | |

அரசாங்க வேலை வாய்ப்புக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

பெருந்தோட்டப் பகுதிகளில் 863 பாடசாலைகளுக்கு 2535 ஆசிரிய உதவியாளர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார். மேலும் நிதியமைச்சின் முகாமைத்துவ சேவை திணைக்களத்தின் பணிப்பாளருடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர், நியமனத்தை வழங்குவதற்கான அனுமதியை வழங்க நிதியமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு நியமிக்கப்படுகின்ற ஆசிரிய உதவியாளர்கள், குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னர் பட்டப்படிப்பை அல்லது ஆசிரிய கலாசாலை கற்கையை பூர்த்தி செய்த பின்னர் நிரந்தர நியமனம் வழங்கப்படும்….