40 வயது காதலனின் வெறியாட்டம்..!
| | | |

40 வயது காதலனின் வெறியாட்டம்..!

பொலனறுவை மின்னேரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரித்தலை யாய 04 பகுதியில் நேற்று இரவு துப்பாக்கி சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான அவர், பொலன்னறுவை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அவர் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும், அவரது நிலை மோசமடைந்ததையடுத்து மேலதிக சிகிச்சைக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த சிறுமி அப்பிரதேசத்தைச் சேர்ந்த 40…

வாகன விபத்தில் இளம் இசைக்கலைஞர் உயிரிழப்பு..!
| | | |

வாகன விபத்தில் இளம் இசைக்கலைஞர் உயிரிழப்பு..!

அனுராதபுரம் – பாதெனிய ஏ28 பிரதான வீதியின் தலாவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலாவ, கெக்கிராவ வீதியில் தலாவ நகருக்கு அருகில் வசித்து வந்த 23 வயதுடைய கோவிந்தகே இஷான் நிமந்த என்ற இசைக்கலைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் இன்று (8) அநுராதபுரத்திலிருந்து தலாவ பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த போது வீதியை விட்டு  வாகனம் மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்….

உயிர் வாழ வைத்த யுவதி இலங்கையில் நெகிழ்ச்சிச் சம்பவம்..!
| | | |

உயிர் வாழ வைத்த யுவதி இலங்கையில் நெகிழ்ச்சிச் சம்பவம்..!

அனுராதபுரத்தில் சியம்பலகஸ்வெவ, ரம்பேவ, பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய உபேக்ஷா சந்தமாலி எனும் யுவதி வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் யுவதி உயிரிழந்த நிலையில் அவரின் உடல் பாகங்கள் தானம் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் அவரின்  கண்கள், கல்லீரல், சிறுநீரகம் என்பன தானமாக வழங்கப்பட்டுள்ளன. பிரபலமான சுப்பர் மார்க்கெட் சங்கிலியின் அனுராதபுர கிளையில் விற்பனையாளராக அவர் பணியாற்றி வந்துள்ளார். கடந்த எட்டாம் திகதி ரம்பேவ மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற…

கர்ப்பிணி பெண் கும்பல் – பொலிஸார் எச்சரிக்கை..!
| | | |

கர்ப்பிணி பெண் கும்பல் – பொலிஸார் எச்சரிக்கை..!

கொழும்பில் இருந்து செல்லும் பேரூந்தில் பயணிக்கும் பயணிகளின் பணப்பைகள், தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட பொருட்களை திருடும் கர்ப்பிணிப் பெண்கள் உள்ளடக்கிய கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான ஹெரோயின் மற்றும் 2 லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக அனுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்புத்தேகம குடாகம மற்றும் புலத்சிங்கள வீதி இங்கிரிய பிரதேசங்களில் வசிக்கும் 20, 23 மற்றும் 30 வயதுடைய இரண்டு கர்ப்பிணிப் பெண்கள் உட்பட…

கிராமங்களில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைதிட்டம்   
| | | | |

கிராமங்களில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைதிட்டம்  

நாட்டில் தெரிவுசெய்யப்பட்ட 86 கிராமங்களில் 45,000 இளநீர் கன்றுகளை நாட்டுவதற்கான விசேட வேலைதிட்டத்தினை தெங்கு செய்கை சபையால் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்படி மொனராகலையில் 03 கிராமங்கள், மாத்தறையில் 01 கிராமம், குருநாகலில் 08 கிராமங்கள், குளியாப்பிட்டியவில் 09, கேகாலையில் 08, கம்பஹாவில் 09, களுத்துறையில் 10, மாரவில 09, இரத்தினபுரி 04, ஹம்பாந்தோட்டையில் 08, அனுராதபுரம், அனுராதபுரம் 02, இந்திராதபுரம், பொலன்னறுவையில் 02, அம்பாறையில் 02, மாத்தளையில் 04, காலியில் 08, மட்டக்களப்பில் 02, யாழ்ப்பாணத்தில் 03,…

ஆண் போல் நடித்து காதலித்த யுவதி கைது..!
| | | |

ஆண் போல் நடித்து காதலித்த யுவதி கைது..!

அனுராதபுரம் – கலென்பிந்துனவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 19வயதுடை யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக ஊடகங்கள் மூலம் குறித்த யுவதி இளைஞன் போல் நடித்து 15 வயது மாணவியுடன் காதல் உறவில் ஈடுபட்டு மாணவியின் தகாத புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒரு வருடமாக காதல் உறவில் ஈடுபட்டு வந்த நிலையில், கைது செய்யப்பட்டபோதே யுவதி ஒருவர் இளைஞனாக வேடமணிந்து காதலித்தது மாணவிக்கு தெரியவந்துள்ளதுடன் இருவரும் சமூக வலைதளங்கள் மூலம் கிட்டத்தட்ட…

இன்றும் பல பகுதிகளில் மழையுடனான வானிலை
| | | |

இன்றும் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

தீவின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் மாத்தளை, பொலன்னறுவை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வட மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கிழக்கு, ஊவா, மேல், சப்ரகமுவ, தென் மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கு மேல் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ரயில் சேவை இடைநிறுத்தம்
| | |

ரயில் சேவை இடைநிறுத்தம்

வடக்கிற்கான தொடரூந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு தொடரூந்து மார்க்கத்தை நவீனமயமாக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனவரி  7 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுமென  தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே மஹவ தொடக்கம் அனுராதபுரம் வரையான வடக்கு தொடரூந்து மார்க்கம் அன்றைய தினம் முதல் 06 மாத காலத்திற்கு மூடப்படும் என அதன் பிரதி முகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே குறிப்பிட்டுள்ளார். இந்த காலப்பகுதியில் கொழும்பில் இருந்து மஹவ மற்றும் அனுராதபுரத்திலிருந்து காங்கேசன்துறை வரை மட்டுமே தொடருந்து சேவைகள் இடம்பெறும் எனவும்…

இன்றும்  தொடரும் மழையுடனான  வானிலை
| | |

இன்றும்  தொடரும் மழையுடனான  வானிலை

தென், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வவுனியா, கிளிநொச்சி, மன்னார் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். தீவின் பிற பகுதிகளில் மதியம் 1.00 மணிக்குப் பிறகு பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். தென், ஊவா, மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் கடந்த மழை சுமார்…