ஜனாதிபதி பதவிக்காலம் முடிவு அனுரகுமார வலியுறுத்து..!
| | | | |

ஜனாதிபதி பதவிக்காலம் முடிவு அனுரகுமார வலியுறுத்து..!

தேர்தல் நடத்தப்பட்டாலும் இல்லாவிட்டாலும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவிக்காலம் முடிவுக்கு வர வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார். கனடாவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டை தற்போதைய பாதையில் இருந்து விடுவிப்பதற்கான அரசியல் மாற்றத்தின் அவசியத்தை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 17 மற்றும் அக்டோபர் 17இற்கு இடையில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கனடாவில் உள்ள இலங்கையர்கள்…

கனடாவுக்கு பறக்கவுள்ள அனுர..!
| | | |

கனடாவுக்கு பறக்கவுள்ள அனுர..!

மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் வாரம் கனடாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இதன் போது, கனடாவில் உள்ள புலம்பெயர் தமிழர்களையும் அவர் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பயணத்தின் போது கனடாவில் உள்ள அரசியல்வாதிகளை அவர் சந்திக்கவுள்ளதுடன், ரொரன்டோ பகுதியில் நடைபெறவுள்ள கூட்டமொன்றிலும் உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

திருடர்களுடன் தாம் ஒருபோதும் இணைந்து செயற்படப்பொவதில்லை..! -சஜித் பிரேமதாச
| | | | |

திருடர்களுடன் தாம் ஒருபோதும் இணைந்து செயற்படப்பொவதில்லை..! -சஜித் பிரேமதாச

ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றிகரமான அரசியல் பயணத்தை தடுப்பதற்காக அரசியல் நயவஞ்சகர்கள் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.  கடவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நேற்றைய தினம்(25) கண்டிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் தலதா மாளிகையில் வழிபாடுகளை மேற்கொண்டதன் பின்னர் மல்வத்து மற்றும் அஸ்கிரி பீட மகா நாயக்க தேரர்களையும் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். இதன்போது, கருத்து…

இந்த வருடம் ஆட்சியை  கைப்பற்றுவோம்  : அனுரகுமார
| | | |

இந்த வருடம் ஆட்சியை கைப்பற்றுவோம் : அனுரகுமார

இந்த ஆண்டில்  ஏதாவது ஓர் வழியில் ஆட்சி கைப்பற்றப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் அண்மையில்  இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், தற்போதைய மோசமான ஆட்சியை தோற்கடித்து ஏதாவது வழியில் ஆட்சியை பெற்றுக்கொள்ள  தயார். மக்களை நெருக்கடியில் ஆழ்த்திய ஆட்சியாளர்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இடையிலான  போரே  நடைபெறுகின்றது. இந்தப் போரிலிருந்து மக்கள் பின்வாங்கக் கூடாது. நிச்சயமாக இந்த…

ரணிலுக்கு நீதிமன்றில் தண்டனை விதிக்கப்படும் : அனுரகுமார எச்சரிக்கை..!
| | | |

ரணிலுக்கு நீதிமன்றில் தண்டனை விதிக்கப்படும் : அனுரகுமார எச்சரிக்கை..!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நீதிமன்றில் தண்டனை விதிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில் ஆட்சி செய்த பலர் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் என்ற அடிப்படையில் ஜனாதிபதியும் சிறையில் இருக்க வேண்டியவர் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் தமது அரசாங்க ஆட்சிக் காலத்தில் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக வழக்குத் தொடர்ந்து தண்டிக்கப்படுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் நீதிமன்றினால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர்கள் சட்டத்தை மிதித்துக்…