விளம்பரத்தை நம்பி சென்றவருக்கு நேர்ந்த கதி..!
| | | |

விளம்பரத்தை நம்பி சென்றவருக்கு நேர்ந்த கதி..!

முகநூலில் பதிவிடப்பட்ட அக்குபஞ்சர் சிகிச்சை தொடர்பான பதிவை நம்பி சென்ற நபரொருவர் கிருமித் தொற்றுக்குள்ளாகி யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளார். இவர் அச்சுவேலி வளலாய் கிழக்கைச் சேர்ந்த மாணிக்கம் சற்குணராஜா என்ற 64 வயதானவரே நேற்று இவ்வாறு  உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் முகநூல் விளம்பரத்தை நம்பி யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் அக்குபஞ்சர் வைத்தியர் எனக் கூறப்படுவரால் நடத்தப்படும் சிகிச்சை நிலையத்தில் தனது இரண்டு முழங்காலிலும் ஊசியால் குத்தும் வகையில் சிகிச்சை பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து இரு கால்களிலும் வீக்கம், மற்றும்…

யாழில் அச்சுவெலியில் அதிக மழை
| |

யாழில் அச்சுவெலியில் அதிக மழை

யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் பெய்த மழையில் அச்சுவேலி பகுதியில் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது. இதற்கமைய, அச்சுவேலியில் 45.3 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், யாழ். நகர் பகுதியில் 35.8 மில்லி மீற்றர், வடமராட்சி அம்பனில் 34.4 மில்லி மீற்றர், தெல்லிப்பழையில் 33.3 மில்லி மீற்றர், நயினாதீவில் 29.1 மில்லி மீற்றர், சாவகச்சேரியில் 24.4 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதானிப்பு மைய…