தாமதமாகும் சத்திர சிகிச்சைகள்..!
| | | |

தாமதமாகும் சத்திர சிகிச்சைகள்..!

விசேட வைத்தியர்களின் பற்றாக்குறை காரணமாக அரச வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகள் தாமதமடைவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் அரச வைத்தியசாலைகளில் மூன்று விசேட வைத்தியர்கள் இருக்க வேண்டிய நிலையில், சில வைத்தியசாலைகளில் ஒருவர் மாத்திரமே உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். இதன் காரணமாக வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகள் தாமதமடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடம் 340 விசேட வைத்தியர்களுக்கான பற்றாக்குறை காணப்பட்டதாகவும், தற்போது சுமார் 400 விசேட வைத்தியர்கள் வெளிநாடுகளில் பயிற்சி பெறுவதற்காக…

யாழ். பல்கலைக்கழக மாணவியின் மரண விசாரணையில் திடீர் திருப்பம்!
| |

யாழ். பல்கலைக்கழக மாணவியின் மரண விசாரணையில் திடீர் திருப்பம்!

யாழ். பல்கலைக்கழக மாணவியின் மரணம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன அறிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் [26]  குறித்த பணிப்புரையை விடுத்துள்ளார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவி மருந்தின் ஒவ்வாமை காரணமாக கடந்த [23] சனிக்கிழமை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் உயிரிழந்த மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மாணவியின் உறவினர்கள் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். இதன்படி, எவ்விதமான ஒவ்வாமையும் இல்லை எனவும்…