கனடாவில் இளையோர் மத்தியில் பரவும் புற்றுநோய்..!
| | | | |

கனடாவில் இளையோர் மத்தியில் பரவும் புற்றுநோய்..!

கனடாவில் இளம் தலைமுறையினர் மத்தியில் பெருங்குடல் புற்றுநோய் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடாவில் புற்றுநோய்த் தாக்கத்தினால் மரணிப்பவர்களில் சுமார் 11 வீதமான மரணங்கள் பெருங்குடல் புற்று நோய்த் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களே என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதில் 50 வயதுக்கும் மேற்பட்டவர்களை விட, 50 வயதுக்கும் குறைந்தவர்கள் மத்தியிலேயே இப்புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், கனடாவில் பெண்களில் 18 பேரில் ஒருவருக்கும், ஆண்களில் 16 பேரில் ஒருவருக்கும் இவ்வாறு பெருங்குடல் புற்று நோய் ஏற்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நோய்…

சாரதியில்லாமல் பயணித்த தொடருந்து..!
| | | | |

சாரதியில்லாமல் பயணித்த தொடருந்து..!

இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் சரக்கு தொடருந்து ஒன்று சாரதியின்றி பயணித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் கதுவா தொடருந்து நிலையத்தில் சரக்கு தொடருந்தின் சாரதி ஹேண்ட் பிரேக் போடாமல் இயந்திரத்தில் இருந்து கீழே இறங்கியுள்ளார். தண்டவாள பாதை சாய்வாக இருந்ததால் திடீரென அந்த சரக்கு தொடருந்து பதான்கோட் நோக்கி சுமார் 100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்து சுமார் 70 கிலோ மீற்றர் தூரம் சென்றுள்ளது. இதனால் தொடருந்தை நிறுத்த முடியாமல் தொடருந்து சாரதி மற்றும் ஊழியர்கள்…

கஞ்சா பாவணையை சட்டப்பூர்வமாக்கும் ஜேர்மனி..!
| | | | |

கஞ்சா பாவணையை சட்டப்பூர்வமாக்கும் ஜேர்மனி..!

ஜேர்மனியின் பாராளுமன்றம் ஒரு குறிப்பிட்ட அளவு கஞ்சாவை பயிரிடுவதையும் உட்கொள்வதையும் சட்டப்பூர்வமாக்கும் சட்டத்தை நிறைவேற்றும்  என்று  எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸின் மற்றும்  ஆளும் மூன்று கட்சி கூட்டணியால் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் கீழ், தனியார் நுகர்வுக்காக மூன்று செடிகள் வரை பயிரிடுவது மற்றும் 25 கிராம் வரை கஞ்சாவை வைத்திருப்பது சட்டப்பூர்வமாக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கையானது போதைப்பொருளின் பொழுதுபோக்கு பயன்பாட்டை சட்டப்பூர்வமாக்கும் ஒன்பதாவது நாடாக ஜெர்மனியை உருவாக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை ஜெர்மனி…

ஸ்பெயினில்  தொடர்மாடிக்குடியிருப்பொன்றில் பாரிய தீ விபத்து..!
| | | | |

ஸ்பெயினில் தொடர்மாடிக்குடியிருப்பொன்றில் பாரிய தீ விபத்து..!

ஸ்பெயினின் வலென்சியா நகரில் கம்பனார் என்ற பகுதியில் உள்ள 14 அடுக்குகளை கொண்ட தொடர்மாடிக்கட்டிடமொன்றில்  நேற்றைய தினம் (22)  பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 4 பேர் பலியானதோடு 14 பேர் காயமடைந்துள்ளனர். அத்தோடு இந்த கட்டிடத்தில் 138 வீடுகள் உள்ளதாகவும் 450க்கும் அதிகமானவர்கள் வசிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனடாவிலிருந்து புறப்பட்ட விமானத்துக்கு மிரட்டல்..!
| | | | |

கனடாவிலிருந்து புறப்பட்ட விமானத்துக்கு மிரட்டல்..!

கனடாவிலிருந்து அமெரிக்கா நோக்கிச் சென்றுகொண்டிருந்த விமானம் ஒன்றிற்க்கு  மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த  விமானம் கடந்த 19ஆம் திகதி கனடாவின் ஹாலிஃபாக்ஸிலிருந்து நியூஜெர்ஸியிலுள்ள Newark என்னுமிடம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது மதியம் 12 மணியளவில் அந்த விமானத்துக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக அமெரிக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் விமானிகள் அந்த விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளதோடு, பயணிகள் அனைவரும் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என்று விமான நிலைய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். 2மோப்ப நாய்கள் உதவியுடன்…

ஹவுதி தாக்குதலால்  ஏடன் வளைகுடாவில் மூழ்கிய இங்கிலாந்து கப்பல்..!
| | | | |

ஹவுதி தாக்குதலால்  ஏடன் வளைகுடாவில் மூழ்கிய இங்கிலாந்து கப்பல்..!

செங்கடலை ஏடன் வளைகுடாவுடன் இணைக்கும் பாப் எல்-மண்டேப் ஜலசந்தி வழியாக பெலிஸ் கொடியுடன் கூடிய இங்கிலாந்து கப்பலான ரூபிமார் சரக்குக் கப்பல், ஹவுதிகளின் தாக்குதலுக்கு உள்ளானதாக ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கை மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் குறித்த கப்பலில் இருந்தவர்கள் தாக்குதல் ஏற்பட்டவுடன் கப்பலைக் கைவிட்டதால் அந்த கப்பல் பெரும் சேதம் அடைந்து மூழ்கியுள்ளதாக ஹவுதி குழுவின் இராணுவ செய்தி தொடர்பாளர் யாஹ்யா சரியா தெரிவித்துள்ளார். மேலும், ஏடன் வளைகுடாவில் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களால்…

இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா..!
| | | | |

இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா..!

இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின் 3 ஆவது போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவின் நிரஞ்சன் ஷா (Niranjan Shah) மைதானத்தில் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பமான போட்டியின் 4 ஆம் நாள் ஆட்டத்தின் போது இந்தியா அணி 434 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடி தனது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து…

ரஸ்ய எதிர்க்கட்சி தலைவர் திடீர் மரணம்
| | | |

ரஸ்ய எதிர்க்கட்சி தலைவர் திடீர் மரணம்

விளாடிமிர் புட்டினை கடுமையாக விமர்சித்துவந்த  ரஸ்ய எதிர்கட்சி தலைர் அலெக்சே நவல்னி நேற்றைய தினம் சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளதாக  சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் 47 வயதுடையவர் எனவும்  திடீர் என உடல்நலம் பாதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் சுயநினைவிழந்தார் எனவும் ரஸ்ய சிறைச்சாலை வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன. ஆர்ட்டிக்கில் உள்ள சிறைச்சாலையிலலே   இவ்வாறு  உயிரிழந்துள்ளார். அத்துடன் அவரை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை எனவும் அவர் உயிரிழந்துவிட்டார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என ரஸ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி..!
| | | | |

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி..!

அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் சுப்பர் போல் விளையாட்டு நிகழ்ச்சிக்கு பின்னர்  , மக்கள் பேரணி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில்  மூவர் சந்தேகத்தின் பேரில்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒன்றுதிரண்டிருந்த பேரணி முடிவில் கென்சாஸ் நகரின் ரயில் நிலையத்தில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. இதன் போது  தொகுப்பாளர் ஒருவரான லீசா லோபஸ் என்பவர் இந்த துப்பாக்கிச் சூட்டில்…

 செல்பி மோகத்தால் உயிரிழந்த இளைஞர்..!
| | | | |

 செல்பி மோகத்தால் உயிரிழந்த இளைஞர்..!

 செல்பி எடுக்கச் சென்ற இளைஞர் ஒருவரை சிங்கம் கடித்து கொன்ற சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச் சம்பவமானது திருப்பதி மலை அடிவாரத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் இடம்பெற்றுள்ளது. இவ்  பூங்காவில் சிங்கங்கள் இருக்கும் பகுதியில் செல்பி எடுப்பதற்காக குறித்த இளைஞர் பாதுகாப்பு வளையத்தை தாண்டி குதித்து உள்ளே சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த சிங்கம் ஒன்று, அவர் மீது பாய்ந்து  கடித்துக் குதறியதுடன்  கழுத்தைப் பிடித்து கடித்துக் கொடூரமாக கொன்றுள்ளதாக அங்கிருந்த பணியாளர்கள்…