மீட்கப்பட்ட சுரங்கத் தொழிலாளர்கள்;அர்னால்ட் டிக்ஸிற்கு குவியும் வாழ்த்து
| | | | | |

மீட்கப்பட்ட சுரங்கத் தொழிலாளர்கள்;அர்னால்ட் டிக்ஸிற்கு குவியும் வாழ்த்து

இந்தியாவின் உத்திரகண்ட் மாநிலத்தில் சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் எவ்வித ஆபத்தும் இன்றி மீட்கப்பட்டுள்ளனர். உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஏராளமான மீட்பு குழுவினரின் உதவியுடன் இவர்கள் கடந்த செவ்வாய்க் கிழமை (28) மீட்கப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பேராசிரியர் அர்னால்ட் டிக்ஸும் இந்த மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தார். சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச சுரங்கப்பாதை மற்றும் நிலத்தடி கூட்டமைப்பின் தலைவராக செயற்படும் இவர் கட்டுமான ஆபத்துகள், பாதுகாப்பு செயல்திறன் தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்கள் ஆகியவற்றில்…

வங்காள விரிகுடாவில் தளம்பல்; நாட்டில் வடகீழ் பருவமழை மழை ஆரம்பம்
| | | | |

வங்காள விரிகுடாவில் தளம்பல்; நாட்டில் வடகீழ் பருவமழை மழை ஆரம்பம்

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடகீழ் பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக, திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது. வடக்கு, கிழக்கு, தென்,வடமத்திய, ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்…

ஐ.பி.எல் போட்டியில் நீடிக்கும் மதீஷ, மஹீஷ்; ஏனைய இலங்கை வீரர்கள் ஏலத்தில்
| | | | |

ஐ.பி.எல் போட்டியில் நீடிக்கும் மதீஷ, மஹீஷ்; ஏனைய இலங்கை வீரர்கள் ஏலத்தில்

17 வது இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) தொடர் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. இந்நிலையில் பத்து அணிகளும் தாம் தக்கவைத்துக் கொள்ளும் வீரர்கள் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை நேற்று முன்தினம் (26) வெளியிட்டன. இப்பட்டியலில் இலங்கை அணியின் இரு வீரர்கள் மாத்திரமே தங்கள் அணியால் தக்கவைக்கப்பட்டுள்ளனர். ஏனைய ஐ.பி.எல் அணிகளில் விளையாடிய இலங்கை வீரர்களை அந்த அணிகள் விடுவித்துள்ளன. இதில் பெங்களூர் அணி முன்னணி சுழற்பந்து வீச்சாளராக செயற்படும் வனிந்து ஹசரங்கவை விடுவித்துள்ளது. அதேபோன்று…

இன்றும் சில இடங்களில் பிற்பகல் மழை
| | | | |

இன்றும் சில இடங்களில் பிற்பகல் மழை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று (28) இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய மாகாணங்களில், இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேலும், மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும்…

ஐ.பி.எல். போட்டியில் இருந்து ஜோ ரூட் விலகல்
| | | | | |

ஐ.பி.எல். போட்டியில் இருந்து ஜோ ரூட் விலகல்

ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு தொடர்ந்து 16 முறை நடைபெற்றிருந்தது. 17 வது ஐ.பி.எல். போட்டி அடுத்த ஆண்டு மார்ச் 23 ஆம் திகதி முதல் மே 29 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19 ஆம் திகதி துபாயில் நடக்க இருக்கின்றது. இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அறிவித்துள்ளார்….

இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும் மழையுடனான வானிலை
| | | | |

இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும் மழையுடனான வானிலை

நாட்டின் பெரும்பாலான இடங்களில் இன்று முதல் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை ஓரளவு அதிகரித்துக் காணப்படும் என சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் ஏனைய மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்தார். கிழக்கு, ஊவா,…

சபையமர்வுகள் மீள ஆரம்பிக்கப்பட்டன
| | | |

சபையமர்வுகள் மீள ஆரம்பிக்கப்பட்டன

நாடாளுமன்றத்திற்குள் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக சபாநாயகரால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட சபையமர்வுகள் மீள ஆரம்பிக்கப்பட்டன. நாடாளுமன்றத்திற்குள் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவினால் சபையமர்வுகள் 5 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டன. வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் இறுதி நாளான இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே இந்த குழப்ப நிலை ஏற்பட்டது. அவர் உரையாற்றும் போது அரச தரப்பு உறுப்பினர்கள் இடையிட்டு கடும் கூச்சலிட்டனர். இதன்போது,…