கனடாவில் கொவிட்  தொற்றாளர்கள்  அதிகரிப்பு !
| | |

கனடாவில் கொவிட்  தொற்றாளர்கள் அதிகரிப்பு !

கனடாவின் ஒட்டாவாவில் கொவிட் நோயார்களின் அனுமதிகள் அதிகரித்துள்ளதாக கொவிட் நோயாளர்களுக்கான வைத்தியசாலையின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் வீரா எட்சஸ் தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் நோய்த் தாக்கத்தினால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் இதனால் அவர்கள் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் எனவும் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது

இங்கிலாந்து அணியிடம் வீழ்ந்தது மேற்கிந்திய தீவுகள்
| | | |

இங்கிலாந்து அணியிடம் வீழ்ந்தது மேற்கிந்திய தீவுகள்

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளிற்கு இடையில் நடைபெற்று வரும் ஒரு நாள் சர்வதேச தொடரின் இரண்டாவது போட்டி நேற்றைய தினம் (6) சேர் விவியன் ரிச்சர்ட்சன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 6 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தியுள்ளது. நேற்றைய (6) போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 39.4 ஓவர்களில் தனது சகல விக்கட்டுக்களையும் இழந்து 202…

மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பு..!
| |

மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பு..!

கடந்த 10 மாதங்களில் 544,488 மின் துண்டிப்புக்களும் மின் இணைப்புக்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை 50 இலட்சம் மின் பாவணையாளர்களுக்கு சிவப்பு கட்டணப் பட்டியலை வழங்குவதாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் இலங்கை மின்சார சபை அறிவிப்பொன்றை வெளியிட்ட்டுள்ளது. குறித்த அறிவிப்பில், மின்சாரம் பயன்படுத்திய ஒரு மாதத்தின் பின்னரே மின் கட்டணத்தை செலுத்த வேண்டும். இக்கட்டணத்தை உரிய நேரத்தில் செலுத்த  தவரும் பட்சத்தில் சிவப்பு பட்டியல் வழங்கப்படும். சிவப்பு பட்டியல் வழங்கப்பட்ட…

இன்றும் பல பகுதிகளில் மழை
| |

இன்றும் பல பகுதிகளில் மழை

நாட்டின் பல மாகாணங்களில் பி.ப . 1.00 மணிக்குப் பின்னர்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீ. அளவான ஓரளவு பலத்த மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மாகாணம் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களின் கரையோரப்…

சீனாவிற்கு செல்வதை தவிர்க்கவும்
| | |

சீனாவிற்கு செல்வதை தவிர்க்கவும்

சீனாவில் சுவாசத்தொகுதியுடன் சம்பந்தப்பட்ட நோய்கள் சமீப காலமாக அதிகரித்து வருவதன் காரணமாக ஹொங்கொங், மக்காவ் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு பயணிக்க வேண்டாமென தாய்வான் சுகாதார அமைச்சு அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், முதியவர்கள், சிறுவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் போன்றோர் இந்நாடுகளுக்கு பயணிப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அந்நாட்டு சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, சுவாசத்தொகுதி நோய்கள் அதிகரிப்பதற்கான காரணம் குறித்து உலக சுகாதார அமைப்பு வினவிய போது, இது கொவிட் தொற்றுக்கு…

இரண்டாவது டெஸ்டில் மோதும் பங்களாதேஷ், நியூசிலாந்து
| | |

இரண்டாவது டெஸ்டில் மோதும் பங்களாதேஷ், நியூசிலாந்து

பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது. டாக்காவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி தனது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பாக முஸ்பிகுர் ரஹிம் அதிக பட்சமாக 35 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் நியூசிலாந்து அணி வீரர் கிளன் பிலிப்ஸ் மற்றும் மிட்சல்…

மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ள ரஷ்ய ஜனாதிபதி
| | |

மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ள ரஷ்ய ஜனாதிபதி

உக்ரைனில் போர் தொடங்கிய பின்னர் ரஷ்ய ஜனாதிபதி மீது  போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளதால்  கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது வெளிநாட்டு பயணங்களை கடுமையாக மட்டுப்படுத்தியிருந்தார். எனினும்,  இன்று (06) மத்திய கிழக்கு நாடுகளான  சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், ​​ சவூதி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகளுடன் இருதரப்பு…

பொலிஸ் உத்தியோகஸ்தர் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி
| | |

பொலிஸ் உத்தியோகஸ்தர் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் நீதிமன்ற நடவடிக்கைகளை குழப்பும் விதமாக செயற்பட்டமையால் கடந்த திங்கட்கிழமை (04) கைது செய்யப்பட்டார். கொழும்பு மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் தற்போது கடமையாற்றி வரும் , யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார். நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (05) வரையில்  விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.  நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான , ஆள்…

இறுதிப்போட்டிக்கு முன்னேறிய Urbanrisers அணி
| | |

இறுதிப்போட்டிக்கு முன்னேறிய Urbanrisers அணி

நடைபெற்றுவரும் 2023/2024 இற்கான லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் சுரேஸ் ரைனா தலைமையிலான Urbanrisers Hyderabad அணி முதலாவது தகுதிப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. நேற்று (05) சூரத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் மொஹம்மட் கைஃப் தலைமையிலான Manipal Tigers அணியை 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Manipal Tigers அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய Urbanrisers Hyderabad அணி…

வன்முறையில் ஈடுபட்ட வாள்வெட்டு கும்பல் கைது
| |

வன்முறையில் ஈடுபட்ட வாள்வெட்டு கும்பல் கைது

கடந்த திங்கட்கிழமை (04) யாழ்ப்பாணம்-தெல்லிப்பழை மற்றும் மல்லாகம் பகுதியில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக  இளைஞன் ஒருவர் மீது மர்ம கும்பல் ஒன்று  வாள் வெட்டு தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. அதன் பின்னர் ஹயஸ் ரக வாகனத்தில் காங்கேசன்துறை – யாழ்ப்பாண வீதியில் தப்பியோடி மல்லாகம் பகுதியில்  பொதுமக்கள் மீது வாள்களை காட்டி அச்சுறுத்தி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது   வன்முறை கும்பல் வாகனத்தில் ஏறி தப்பி ஓடியுள்ளனர் . தப்பியோடிய வாகனத்தை…