ஜனாதிபதியால் பதில் பொலிஸ் மா அதிபர் நியமனம்
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனமானது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை இவர், மேல் மாகாணத்திற்கான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபராக கடமையாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரட்னவிற்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில் அண்மையில் அவர் ஓய்வு பெற்றிருந்தார். இந்நிலையில், நாட்டில் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு நீண்ட காலமாக வெற்றிடம் நிலவி வந்த நிலையிலேயே…