ஆசிரியரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி கொலை :
| | | | |

ஆசிரியரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி கொலை :

கொழும்பு, கருவாத் தோட்டம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றினுள் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் நேற்றைய தினம் தெமட்டகொட பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 15 ஆம் திகதி கருவாத் தோட்ட வீடொன்றில் பெண் ஒருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் ஆசிரியர்  எனவும் குறித்த சம்பவம் இடம்பெற்ற அன்று சந்தேகத்துக்கிடமான நபர் ஒருவர் குறித்த வீட்டிற்கு வருகை தருவதும்  செல்வதும் அங்கு பொருத்தப்பட்டிருந்த  சி.சி.டி.வி கமராக்களில் பதிவாகியிருந்தன. அதன்படி  குறித்த நபர்…

 தரம் 4 மாணவனை தாக்கிய ஆசிரியர்
| | |

 தரம் 4 மாணவனை தாக்கிய ஆசிரியர்

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 4இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை ஆசிரியர் தாக்கியுள்ளார். அப்பியாச கொப்பியில் ஒழுங்காக எழுதவில்லை என ஆசிரியை, மாணவனின் கையில் அடித்தமையால்  மாணவனின் கை நகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு இலக்கான மாணவன் வைத்த்கியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது கை நகம் சிதைவடந்த நிலையில் காணப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவனின் கை நகம் வைத்தியசாலை சத்திர சிகிச்சை வைத்தியரினால்   சத்திர சிகிச்சை செய்யப்பட்டு அகற்றப்பட்டுள்ளது.. இச் சம்பவம் தொடர்பில்…

நாளை பாராளுமன்றத்தில் விசேட மாநாடு
| | | | |

நாளை பாராளுமன்றத்தில் விசேட மாநாடு

உலக அமைதியை நிலை நாட்டுவதற்காக ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களிடையே விசேட சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களிடையில் வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லாட்சியை ஊக்குவித்தல் எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த மாநாடு நாளை புதன்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அமைதிக்கான சர்வதேச மாநாட்டுப் பேரவையின் தலைவரும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் இது நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை…

தமிழ் மாணவன் ரிஷியுதனின் அபார பந்துவீச்சு
|

தமிழ் மாணவன் ரிஷியுதனின் அபார பந்துவீச்சு

எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி தமிழ் மாணவன் ஒருவர் சாதனைபடைத்துள்ளார்.  கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மாணவன் செல்வசேகரன் ரிஷியுதன் என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.   இவர் ஓட்டங்கள் எதனையும் வழங்காது  அபாரமாக பந்துவீசி திறமையாக விளையாடியுள்ளார். இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் 13 வயதுக்குட்பட்டோருக்கான இரண்டாம் கட்ட முதல்தர போட்டியில் பங்குபற்றியே பாடசாலை மட்டத்தில் சாதனைப் படைத்துள்ளார். இதனால்  அடுத்த வாரம் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இளைஞர் விவகார, விளையாட்டுத் துறை…

நீதிமன்றில்  பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது- பருத்தித்துறையில் சம்பவம்
| | | |

நீதிமன்றில்  பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது- பருத்தித்துறையில் சம்பவம்

மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் துன்னாலை பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில், நீதிமன்ற விசாரணைக்கு இடையூறு விளைவித்ததன் காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்தநபர் இன்றைய தினம் (04) திங்கட்கிழமை நீதிமன்றத்திற்கு சாட்சியமளிப்பதற்காக சென்றிருந்த போதே கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர்  நீதிமன்ற அமர்வில் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதனை அடுத்து நபரை கைது செய்த, நீதிமன்ற பொலிஸார் பருத்தித்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். சந்தேக நபரை நாளைய தினம் செவ்வாய்க்கிழமை…

திருகோணமலையில் 5வது நாளாகவும் தொடரும் உண்ணாவிரத போராட்டம்
| | |

திருகோணமலையில் 5வது நாளாகவும் தொடரும் உண்ணாவிரத போராட்டம்

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட வெல்கம் விகாரை வனப்பகுதியில் பாரிய காணிப்பகுதியினை அபகரித்து ஒரு சிலர் அப்பகுதியினை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதற்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை அப்பகுதி வாசிகள் ஆரம்பித்துள்ளனர். திருகோணமலை – அனுராதபுரம் பிரதான வீதியினை மறித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அது இன்றுடன் தொடர்ச்சியாக 5வது நாளாகவும் நடைபெறுகிறது. வெல்கம் விகாரை வனப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் காட்டு மரங்கள் அழிக்கப்பட்டு அங்கு 30 ஏக்கருக்கும் அதிகமான…

இலங்கையில் டெங்கு நோய் பரவும் வலயங்களாக அடையாளம் காணப்பட்ட 54 பகுதிகள்…
| | |

இலங்கையில் டெங்கு நோய் பரவும் வலயங்களாக அடையாளம் காணப்பட்ட 54 பகுதிகள்…

தொற்றுநோயியல் பிரிவானது டெங்கு நோய் பரவும் அபாயமுடைய 54 பகுதிகளை அடையாளம் கண்டுள்ளது.இதற்கேற்ப மேல்மாகாணத்தில் 36,076 வழக்குகள் பதிவாகியுள்ளன. அத்தோடு ஜனவரி 2023 முதல் டெங்கு நோாயால் 46 இறப்புகள் பதிவாகியுள்ளதுடன் கடந்த நான்கு மாதங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 7,995 ஆக அதிகரித்துள்ளது மற்றும் நவம்பர் மாதத்தில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கையை விட அதிகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு சூறாவளி எச்சரிக்கை!
| | | |

மக்களுக்கு சூறாவளி எச்சரிக்கை!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் வலுவடைந்த மிச்ஜங் சூறாவளி, யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்கு திசையில் 365 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மிச்சங் சூறாவளி மீண்டும் வலுவடைந்து நாட்டை விட்டு வடமேற்கு நோக்கி நகரும் என திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக மேல், சப்ரகமுவ, வடக்கு, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான மழை பதிவாகும் என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, வங்க கடலில் உருவாகியுள்ள மிச்ஜங்…

4 வெற்றிகளுடன் தொடரைக் கைப்பற்றியது இந்தியா
| | | | |

4 வெற்றிகளுடன் தொடரைக் கைப்பற்றியது இந்தியா

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான T20 தொடரின் 5 ஆவதும் இறுதியுமான போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. நேற்றைய தினம் பெங்களூரில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டி தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி வழங்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றது….

முட்டை விலை தொடர்பில் வெளிவந்த மகிழ்ச்சி தகவல்…
| | |

முட்டை விலை தொடர்பில் வெளிவந்த மகிழ்ச்சி தகவல்…

இலங்கையில் கடந்த சில மாதங்கள் முடடையின் விலை அதிகரித்து வந்த நிலையில்,தற்பொழுது பண்டிகைக்காலத்தை கருத்திற் கொண்டு முட்டையின் விலை குறைந்து வருகின்றது. இதைப்பற்றி விற்பனையாளர்கள் தெரிவிக்கையில் முட்டையை 40 ரூபா தொடக்கம் 43 ரூபாவுக்கு கொள்வனவு செய்யலாம் என தெரிவித்துள்ளனர். மற்றும் முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவிக்கையில் முட்டையின் விலை குறைவடைய உள்ளூர் முட்டை உற்பத்தி அதிகரித்ததே காரணம் என தெரிவித்துள்ளார். வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ சமீபத்தில் அறியத்தந்ததாவது எதிர்வரும் தை…