திருகோணமலைக்கு ஐரோப்பிய ஒன்றிய குழுவினர் விஜயம்
| | |

திருகோணமலைக்கு ஐரோப்பிய ஒன்றிய குழுவினர் விஜயம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினர் நேற்று திருகோணமலை மாவட்டத்தின் குளக்கோட்டன் பூங்காவில் அமைக்கப்பட்ட சிறுவர்களது பொழுது போக்கு ரயில் ஒன்றினை பார்வையிட வருகை தந்திருந்தனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பாக திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்த அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிடுவதற்காக வந்திருந்த திரு.டேவிட் மற்றும் திருமதி.பெயா தலைமையிலான குழுவினர் குறித்த ரயிலினை பார்வையிட்டதுடன் பெற்றோர் சிலருடனும் கலந்துரையாடினர். இவ்வாறான பொழுதுபோக்கு அம்சங்கள் திருகோணமலையில் குறைவாகவே காணப்படுவதாகவும், குறிப்பாக இளைஞர் யுவதிகளுக்கான சில விளையாட்டு அம்சங்கள் சார்ந்த வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கும்பட்சத்தில் திருகோணமலை மாவட்டத்தினை…

சென்னையில் மின்சாரம் மற்றும் போக்குவரத்து தடை
| | | | |

சென்னையில் மின்சாரம் மற்றும் போக்குவரத்து தடை

சென்னையில் மிக்ஜம் சூறாவளி பாதிப்பு மற்றும் பெய்த கடும் மழை காரணமாக வீதிகள், தண்டவாளங்கள், விமான நிலையம் என சென்னை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால், விமானங்களுக்குள் வெள்ளநீர் புகுந்து விமான சேவைகள் தமதமாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. புனேயிலிருந்து சென்னை வந்து சேர வேண்டிய விமானங்கள் தாமதமாகியதுடன், சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் தாமதித்தே புறப்பட்டன. மோசமான காலநிலையினால் அங்கு மின்சாரமும் தடைப்பட்டுள்ளது. தாழ்வான இடங்களில் மழை நீர் புகுந்ததால் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கி, ரயில்…

இங்கிலாந்தை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள்
| | | |

இங்கிலாந்தை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள்

கடந்த ஞாயிற்றுக்கிழமை  இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளிற்கு இடையே ஆரம்பித்த 3 ஒருநாள் மற்றும் 5 T20 போட்டிகளைக் கொண்ட தொடரின் முதலாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி இந்தியாவுடன் விளையாடிய பின்னர் மேற்கிந்திய தீவுகள் விளையாடும் சர்வதேச போட்டி இதுவாகும். ஞாயிற்றுக்கிழமை பர்புடாவில் நடைபெற்ற இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி…

டெங்கினால் இருவர் உயிரிழப்பு; யாழில் சம்பவம்
| | | |

டெங்கினால் இருவர் உயிரிழப்பு; யாழில் சம்பவம்

யாழ் மாவட்டத்தில் கடந்த 11 மாதங்களில், 2,203 நோயாளர்க்ள் இனங்காணப்பட்டதுடன் இரண்டு மரணங்களும் பதிவாகியுள்ளன என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும், அவர் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் 110 நோயாளிகளும், ஒக்டோபர் மாதத்தில் 118 நோயாளிகளும் நவம்பர் மாதத்தில் 427 நோயாளிகளும் டிசம்பர் மாதத்தின் முதல் மூன்று நாட்களில் 82 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், நல்லூர் மற்றும் சண்டிலிப்பாய் ஆகிய இடங்க்ளில் நவம்பர் மாதத்தில் அதிக டெங்கு நோயாளர்கள் …

மெராபி எரிமலை வெடித்துச் சிதறியதில் 11 பேர் பலி
| | | |

மெராபி எரிமலை வெடித்துச் சிதறியதில் 11 பேர் பலி

இந்தோனேசியாவின் மேற்கு சுமாத்ரா தீவிலுள்ள  மெராபி எரிமலை ஞாயிற்றுக்கிழமை (03) வெடித்து சிதறிய போது  75 பேர் அப்பகுதியில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 11 மலையேறும் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அத்தோடு, 12 பேரை காணவில்லை என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், படாங் தேடல் மற்றும் மீட்பு முகாமைத்துவத்தின்  தலைவர் அப்துல் மாலிக் குறித்த பகுதியிலிருந்து வெளியேற முடியாமல்  இருந்த 26 பேரில் 3 பேர்  உயிருடன் மீட்கப்பட்டு 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். எரிமலை…

முச்சக்கர வண்டி கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்…
| | |

முச்சக்கர வண்டி கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்…

முச்சக்கர வண்டி கட்டணம் தொடர்பாக நேற்று இலங்கை சுயதொழில் வல்லுநர்களின் தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் மகிந்த குமார கூறுகையில் பெற்றோலின் விலை குறைக்கப்பட்டதால் முதல் கிலோமீட்டர் முச்சக்கரவண்டிக்கு கட்டணம் ரூபாய் 90 அறவிடப்படும் என தெரிவித்துள்ளார். அதற்கேற்ப அவர் ரூபாய் 100 கட்டணத்தில் பயணிகள் போக்குவரத்தை ஆரம்பித்த அனைத்து முச்சக்கர வண்டிகளும் ரூபாய் 90 இல் பயணிக்க ஆரம்பிக்க வேண்டும் என கூறியுள்ளார்.மற்றும் 100 ரூபாயுடன் ஆரம்பிக்காத முச்சக்கரவண்டிகள் தொடர்பில் கேள்வி கேற்க பயணிகளுக்கு உரிமை…

கணவனை  வாளால் வெட்டி கொலை செய்த பெண்…
| | |

கணவனை வாளால் வெட்டி கொலை செய்த பெண்…

குருநாகலில் நேற்று பிற்பகல் ஐந்து மணியளவில் கணவனை வாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு உயிரிழந்த நபர் பலகஹகம, தல்விட்ட பகுதியைச் சேர்ந்த சுரங்க பிரதீப் குமார (38 வயது) என்பவராகும். இவ்வாறு, கணவனை வாளால் வெட்டி கொலை செய்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாரால் கைது செய்யப்படட பெண் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று மாலை கணவன்…

ஐபிஎல் தொடருக்கு தெரிவு செய்யப்பட்ட இலங்கை வீராங்கனை
| | | |

ஐபிஎல் தொடருக்கு தெரிவு செய்யப்பட்ட இலங்கை வீராங்கனை

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மகளிருக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஏலத்தில் இலங்கை வீராங்கனை தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித் தலைவி சமரி அத்தபத்து என்பவரே இவ்வாறுதெரிவு செய்யப்பட்டுள்ளார். 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற அவுஸ்திரேலிய பிக் பாஷ் மகளிர் போட்டியில் சமரி அத்தபத்து சிறப்பாக விளையாடியதன் காரணமாகவே இந்த வாய்ப்பை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் ஆரம்ப விலையாக 30 இலட்சம் ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 9ம் திகதி மகளிருக்கான ஐ.பி.எல்….

மீண்டும் சாதாரண தரப் பரீட்சை பற்றிய தகவல் தொடர்பான பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு…
| | |

மீண்டும் சாதாரண தரப் பரீட்சை பற்றிய தகவல் தொடர்பான பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு…

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் 01.12.2023 அன்று வெளியாகியுள்ள நிலையில், மீண்டும் க.பொ.த சாதாரண தரப்பு பரீட்சை நடைபெறப்போவதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி ஒன்று பரவி வருகின்றது. இந்த வதந்திக்கு மோசடிக்காரர்களே காரணம் என பரீட்சை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.ஆகையால் மீண்டும் பரீட்சை நடைபெற வாய்ப்புகள் இல்லை எனவும் பரீட்சை வட்டாரங்கள் கூறியுள்ளனர். இவ்வாறு பரவி வந்த வதந்தி தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாடு மேய்க்க சென்றவருக்கு நேர்ந்த சோகம்…
| | |

மாடு மேய்க்க சென்றவருக்கு நேர்ந்த சோகம்…

திருகோணமலையில் உள்ள ஊத்தவாய்க்கால் ஆற்றில் நேற்றைய தினம் (03.11.2023) மாடு மேய்க்க சென்ற இடத்தில் ஒருவர் முதலை கடித்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவமானது தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலம்போட்டாறு ஊத்தவாய்க்கால் ஆற்றில் இடம்பெற்றுள்ளதுடன், முதலை கடித்து உயிரிழந்த நபர் சிப்பித்திடல் தம்பலகாமத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளுக்கு தந்தையான கே.சசிகுமார் (36 வயது) எனும் குடும்பஸ்தர் ஆவார். மற்றும் மாடு மேய்க்க இருவர் சென்ற இடத்தில் ஒருவரே காணாமல் போயுள்ளார்.இதனைத்தொடர்ந்து பொது மக்கள் தேடுதல் முயற்சியில் இறங்கி சடலத்தை மீட்டுள்ளனர்.இது…