உக்ரைன் புலனாய்வு பிரிவின் தலைவரின் மனைவி மருத்தவமனையில் அனுமதி
| | | |

உக்ரைன் புலனாய்வு பிரிவின் தலைவரின் மனைவி மருத்தவமனையில் அனுமதி

உக்ரைன் புலனாய்வு பிரிவின் தலைவர் கைரைலோ புடனோவின் மனைவி மரியானா புடனோவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என உக்ரைன் தெரிவித்துள்ளது. கிய்வ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நஞ்சூட்டப்பட்டுள்ளார் என உக்ரைனின் இராணுவ புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. எனினும், அவர் எப்போது நஞ்சூட்டப்பட்டார் இதற்கு யார் காரணம் என்ற விபரங்களை உக்ரைன் வெளியிடவில்லை. ரஷ்யாவிற்கு எதிரான இரகசிய நடவடிக்கைகளை முன்னெடுத்ததன் காரணமாக ரஷ்யாவின் புலனாய்வு பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட பத்திற்கும் அதிகமான கொலை முயற்சிகளில் இருந்து உக்ரைனின் புலனாய்வு பிரிவின் தலைவர்…

ஜனாதிபதியால் பதில் பொலிஸ் மா அதிபர் நியமனம்
| | | |

ஜனாதிபதியால் பதில் பொலிஸ் மா அதிபர் நியமனம்

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக  நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனமானது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை இவர், மேல் மாகாணத்திற்கான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபராக கடமையாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரட்னவிற்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில் அண்மையில் அவர் ஓய்வு பெற்றிருந்தார். இந்நிலையில், நாட்டில் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு நீண்ட காலமாக வெற்றிடம் நிலவி வந்த நிலையிலேயே…

மீண்டும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கலைப்பொருட்கள்
| | | | |

மீண்டும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கலைப்பொருட்கள்

வாள் மற்றும் தங்கம், வெள்ளி, வெண்கலம் என்பன பதிக்கப்பட்ட பீரங்கி உட்பட 6 கலைப்பொருட்கள் நெதர்லாந்தில் இருந்து மீண்டும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இன்று (29) அதிகாலை 05.05 மணி அளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-554 மூலம் ஜேர்மன், பிராங்பேர்ட்டில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இந்த தொல்பொருட்கள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவரினால் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடம் இக்கலைப்பொருட்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. 1756 ஆம் ஆண்டு டச்சுக்காரர்களால்…

இத்தாலியில் தானம் செய்யப்பட்ட இலங்கையரின் உடலுறுப்புகள்
| | | |

இத்தாலியில் தானம் செய்யப்பட்ட இலங்கையரின் உடலுறுப்புகள்

இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மூளைச்சாவடைந்த இலங்கையர் ஒருவரின் உடலுறுப்புகள் அந்நாட்டில் உள்ள நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளன. ஷமில பெர்னாண்டோ என்ற 35 வயதுடைய நபரின் உடல் உறுப்புகளே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது. அவரது மனைவி, தாய் மற்றும் இரு சகோதரர்களின் அனுமதியுடனேயே அவரது உடலுறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. அதற்கமைய, அவரின் இரண்டு சிறுநீரகங்கள், இதயம், கல்லீரல், நுரையீரல் மற்றும் இரண்டு கண்கள் ஆகியன இவ்வாறு தானம் செய்யப்பட்டுள்ளன. இவரது மனைவி…

மீட்கப்பட்ட சுரங்கத் தொழிலாளர்கள்;அர்னால்ட் டிக்ஸிற்கு குவியும் வாழ்த்து
| | | | | |

மீட்கப்பட்ட சுரங்கத் தொழிலாளர்கள்;அர்னால்ட் டிக்ஸிற்கு குவியும் வாழ்த்து

இந்தியாவின் உத்திரகண்ட் மாநிலத்தில் சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் எவ்வித ஆபத்தும் இன்றி மீட்கப்பட்டுள்ளனர். உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஏராளமான மீட்பு குழுவினரின் உதவியுடன் இவர்கள் கடந்த செவ்வாய்க் கிழமை (28) மீட்கப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பேராசிரியர் அர்னால்ட் டிக்ஸும் இந்த மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தார். சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச சுரங்கப்பாதை மற்றும் நிலத்தடி கூட்டமைப்பின் தலைவராக செயற்படும் இவர் கட்டுமான ஆபத்துகள், பாதுகாப்பு செயல்திறன் தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்கள் ஆகியவற்றில்…

தொடரின் முதலாவது வெற்றியை பதிவு செய்த அவுஸ்திரேலியா
| | | |

தொடரின் முதலாவது வெற்றியை பதிவு செய்த அவுஸ்திரேலியா

இந்தியாவில் நடைபெற்றுவரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகளைக் கொண்ட T20 தொடரின் 3 வது போட்டி நேற்று நடைபெற்றது. அஸ்ஸாமில் நடைபெற்ற இந்த போட்டியில் அவுஸ்திரேலிய அணி 5 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 222 ஓட்டங்களைப் பெற்றது. இந்திய அணி சார்பாக ருத்துராஜ் கெய்க்வாட் அதிரடியாக துடுப்பெடுத்தாடி…

வங்காள விரிகுடாவில் தளம்பல்; நாட்டில் வடகீழ் பருவமழை மழை ஆரம்பம்
| | | | |

வங்காள விரிகுடாவில் தளம்பல்; நாட்டில் வடகீழ் பருவமழை மழை ஆரம்பம்

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடகீழ் பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக, திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது. வடக்கு, கிழக்கு, தென்,வடமத்திய, ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்…

நீதிமன்றால் பிணை வழங்கப்பட்டவர் உயிரிழப்பு
| | |

நீதிமன்றால் பிணை வழங்கப்பட்டவர் உயிரிழப்பு

வெளிநாட்டுக்கு அனுப்புதல் தொடர்பாக பண மோசடி குற்றச்சாட்டில் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் வவுனியா நீதிமன்றத்தால் இன்று செவ்வாய்க்கிழமை (28) பிணையில் விடுவிக்கப்பட்டார். வெளிநாடு செல்வதற்கு சிலர் குறித்த நபர் ஊடாக வேறொரு நபருக்கு பணம் கொடுத்துள்ளனர். பணத்தை பெற்றுக் கொண்டவர் அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பாமையால், குறித்த நபருக்கு எதிராக பணம் கொடுத்தவர்கள் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து, குறித்த நபரை கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தில்…

இன்னும் இரண்டு நாட்கள் நீடிக்கும் போர் நிறுத்தம் – கட்டார் அறிவிப்பு
| | | |

இன்னும் இரண்டு நாட்கள் நீடிக்கும் போர் நிறுத்தம் – கட்டார் அறிவிப்பு

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்தம் மேலும் இரண்டு நாட்கள் நீடிப்பதற்கு இரு தரப்பும் இணங்கியுள்ளன. நான்கு நாட்கள் போர் இடைநிறுத்தம் நடைமுறைபடுத்தப்பட்டு முடிவிற்கு வருவதற்கு சற்று முன்னர் கட்டார் இந்த அறிவிப்பை அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து மூன்று வயது சிறுவன் உட்பட 11 பணயக்கைதிகளையும் சேர்த்து ஹமாஸ் 50 பணயக்கைதிகளையும் விடுதலை செய்துள்ளது. இதேவேளை, 30 சிறுவர்கள் மூன்று பெண்கள் உட்பட 33 பலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்: சுனாமி அச்சுறுத்தல் இல்லை
| | | | |

பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்: சுனாமி அச்சுறுத்தல் இல்லை

பப்புவா நியூ கினியாவின் வடக்கு கடற்கரையில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பசிபிக் தீவு மாநிலத்தின் கிழக்கு செபிக் மாகாணத்தின் தலைநகரான வெகாக் நகரிற்கு அண்மையிலுள்ள கடற்கரையிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கமானது கடல் மட்டத்திலிருந்து 12 கிலோமீட்டர் (ஏழு மைல்) ஆழத்தில் இன்று (28) காலை 8:46…