ஆசிரியரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி கொலை :
| | | | |

ஆசிரியரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி கொலை :

கொழும்பு, கருவாத் தோட்டம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றினுள் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் நேற்றைய தினம் தெமட்டகொட பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 15 ஆம் திகதி கருவாத் தோட்ட வீடொன்றில் பெண் ஒருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் ஆசிரியர்  எனவும் குறித்த சம்பவம் இடம்பெற்ற அன்று சந்தேகத்துக்கிடமான நபர் ஒருவர் குறித்த வீட்டிற்கு வருகை தருவதும்  செல்வதும் அங்கு பொருத்தப்பட்டிருந்த  சி.சி.டி.வி கமராக்களில் பதிவாகியிருந்தன. அதன்படி  குறித்த நபர்…

நாளொன்றுக்கு 300 டெங்கு நோயாளர்கள் பதிவு..!
| | | |

நாளொன்றுக்கு 300 டெங்கு நோயாளர்கள் பதிவு..!

நாட்டில் நாளொன்றுக்கு சுமார் 300 டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தில் டெங்கு  நோயினால் 38,164 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த வருட ஆரம்பம் முதல் இதுவரை 83,065 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள மாவட்டங்களில் 65 டெங்கு அபாய வலயங்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் 49 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

மகிந்தவை சந்தித்ததால் – கரி ஆனந்த சங்கரி சீற்றம்
| | | | | |

மகிந்தவை சந்தித்ததால் – கரி ஆனந்த சங்கரி சீற்றம்

உலகத்தமிழ் பேரவையும் கனேடிய காங்கிரசும் முன்னாள்  ஜனாதிபதியான மகிந்த ராஜபக்‌ஷவை நேரில் சந்தித்ததையிட்டு  தான் கவலை அடைவதாக கனடாவின் பழங்குடியின  உறவுகளின் அமைச்சர் கரி ஆனந்தசங்கரி தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். பாரிய அளவிலான மதவுரிமை மீறல்களுக்கு எதிராக கனேடிய அரசானது மகிந்த ராஜபக்‌ஷ மற்றும் கோட்டபாயராஜபக்‌ஷ ஆகியோர் மீது இவ்வருடம் ஜனவரி மாதம் 10 ம் திகதி  தடை விதித்தது. தப்பிப்பிழைத்தவர்கள், சமூகமக்கள் மற்றும் இலங்கையில் உள்ள தமிழர்கள் ஆகியோரை கலந்தாலோசிக்காது மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி…

பொதுஜன பெரமுனவின் புதிய தலைவர் நியமனம்
| | | |

பொதுஜன பெரமுனவின் புதிய தலைவர் நியமனம்

சிறீலங்காபொதுஜனபெரமுனவின் புதிய தலைவராக மஹிந்தராஜபக்ஷ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிறீலங்காபொதுஜனபெரமுனவின் தேசிய மாநாடானது நேற்று (15) கொழும்பிலுள்ள சுஹததாச உள்ளக அரங்கில் நடைபெற்றது. இந்த மாநாடு கட்சியின் புதிய தலைவரும் முன்னால் ஜனாதிபதியுமான மஹிந்தராஜபக்ச தலைமையில் நடைபெற்றது. இவ் மாநாட்டில் மஹிந்தராஜபக்சவினை கட்சியின் புதிய தலைவராக காமினி லொக்குகே முன்மொழிந்ததை தொடர்ந்து முன்னால் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ வழிமொழிந்தார். இம்மாநாட்டில் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் நாடுமுழுவதிலும் உள்ள கட்சி அங்கத்தவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதில் உரையாற்றிய மஹிந்தராஜபக்ஷ…

வெள்ளத்தினால் அவதிப்படும் கிளிநொச்சி மக்கள்…!
| | | |

வெள்ளத்தினால் அவதிப்படும் கிளிநொச்சி மக்கள்…!

கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழையால் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அதிக மழைவீழ்ச்சியால் நீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக இரணைமடு குளத்தின் 14 வான்கதவுகளும் 3அடிக்கு திறக்கப்பட்டுள்ளன. கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம், புளியம்பொக்கணை ஆகிய பிரதேசங்களில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாய நிலங்களுக்குள் வெள்ள நீர் புகுந்து பயிர்ச்செய்கை நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன், பொதுமக்களின் நாளாந்த செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேறி நண்பர்கள் மற்றும்…

தாய்ப்பால் புரைக்கேறி குழந்தை உயிரிழப்பு! ; யாழில் சம்பவம்
| | | |

தாய்ப்பால் புரைக்கேறி குழந்தை உயிரிழப்பு! ; யாழில் சம்பவம்

யாழ்பாணத்தில் பிறந்த குழந்தை ஒன்று, நேற்று முன்தினம் (03.12.2023) ஞாயிற்றுக் கிழமை அன்று  தாய்ப்பால் குடிக்கும் போது , பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளது. அந்த குழந்தை பிறந்து 26 நாட்களே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. கொடிகாமம் , மிருசுவிலை சேர்ந்த ராசன் அஷ்வின் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது. தாய் பால் குடிக்கும் போது , சுவாச குழாய்க்குள் பால் புரைக்கேறியதால், இந்த மரணம் சம்பவித்ததாக  விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் இசை நிகழ்விற்கு அனுமதி இல்லை
| | | |

யாழில் இசை நிகழ்விற்கு அனுமதி இல்லை

யாழில் வருட இறுதி இசை நிகழ்விற்கு மாநகர சபை அனுமதி வழங்க மறுத்துள்ளது. யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள பிரபல விடுதி ஒன்றில், வருட இறுதியை முன்னிட்டு இரவு இசை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்விற்கு யாழ்.மாநகர சபையிடம் அனுமதி கோரப்பட்ட நிலையில் மாநகர சபை அனுமதியை வழங்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் கடந்த நவம்பர் மாதம் 4ஆம் திகதி விடுதி ஒன்றில் இடம்பெற்ற இசை நிகழ்வில் கலந்து கொண்ட இளையோர் மது அருந்தியதாகவும், அதில் சிலர் போதைப்பொருளை…

வடக்கு நோக்கி நகரும் மிக்ஜம் சூறாவளி
| | | | |

வடக்கு நோக்கி நகரும் மிக்ஜம் சூறாவளி

வங்காள விரிகுடாவின் மேற்குப் பகுதியின் மத்தியில் யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 520 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள மிகவும் பலமிக்க மிக்ஜம் சூறாவளியானது வட திசையினூடாக நகர்கின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த சூறாவளியானது இன்று காலை சுமார் 11.30 மணியளவில் இந்தியாவின் தென் ஆந்திரப் பிரதேசத்தை ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். இது குறித்து மேலும் கூறிய அவர், வடக்கு, மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மாகாணங்களில்…

கோப்பாயில் இடம்பெற்ற ஆறுமுக நாவலர் குருபூசை
| | | |

கோப்பாயில் இடம்பெற்ற ஆறுமுக நாவலர் குருபூசை

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் இந்து மன்ற ஏற்பாட்டில் கலாசாலை அதிபர் த. சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில்  நாவலர் குருபூசை தின நிகழ்வு  இன்று (04) இடம் பெற்றது. தொடக்க நிகழ்வாக  கலாசாலை அதிபர் ச. லலீசனும் இந்து மாமன்ற காப்பாளரும் விரிவுரையாளருமாகிய கு. பாலசண்முகனும்   கலாசாலை வாயிலில் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து கலாசாலை விரிவுரையாளர்களும் ஆசிரிய மாணவர்களும் மலர் வணக்கம் செலுத்தினர். சமய…

இத்தாலிக்கு போலி விசா மூலம் செல்ல முயன்றவர்கள் கைது…
| | |

இத்தாலிக்கு போலி விசா மூலம் செல்ல முயன்றவர்கள் கைது…

கட்டார் டோஹா ஊடாக போலி விசா மூலம் இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை இளைஞனையும் (35 வயது) இளம் பெண்ணையும் (25 வயது) நேற்று கட்டுநாயக்க புறப்பாடு முனையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை அமலாக்கப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இந்த தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் நேற்று காலை 03.25 மணியளவில் கட்டார் ஏர்வேஸ் விமானத்தில் தோஹா நோக்கி செல்வதோடு, இவர்கள் இருவரும் நிட்டம்புவ, வத்துபிட்டியல பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும். இவர்கள்…