அமெரிக்க ஹவாய் தீவில் நிலநடுக்கம்..!!
| | | | | |

அமெரிக்க ஹவாய் தீவில் நிலநடுக்கம்..!!

அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பிக் ஐலண்ட் பகுதியில் 5.7  ரிக்டர்  அளவுகோலில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக   அமெரிக்க புவிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லையென  சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

காணாமல் போன ஆரல் கடல்
| | | | | |

காணாமல் போன ஆரல் கடல்

கஜகஸ்தானுக்கும், உஸ்பெகிஸ்தானுக்கும் இடையே அமைந்துள்ள ஆரல் கடல் முழுவதும் வற்றி நிலமாக மாறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 68,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்ட இக்கடல் உலகின் 4 ஆவது பெரிய கடலாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. ஆரல் கடல் காணாமல் போனதற்கான காரணம் குறித்து விரிவாக ஆய்வு நடந்தப்பட்ட நிலையில் 1960 ஆம் ஆண்டு சோவியத் யூனியனின் சோவியத் நீர்ப்பாசனத் திட்டங்களை ஆரம்பித்தது. இதன் மூலம் கஜகஸ்தான், உஸ்பகிஸ்தான் மற்றும் துர்க்மேனிஸ்தான் ஆகிய வறண்ட…

சிலியில் பாரிய காட்டுத் தீ
| | | | | |

சிலியில் பாரிய காட்டுத் தீ

சிலி நாட்டில் பரவி வரும் பாரிய காட்டுத்தீயினால் இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளதோடு, நூற்றுக்கணக்கானவர்களைக் காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் மேலும் அந்நாட்டு ஜனாதிபதி கேப்ரியல் போரிக்கும்  ஞாயிற்றுக்கிழமை எச்சரித்துள்ளார். மேலும் திங்கட்கிழமை 10 பேர்  தீயில் சிக்கி உயிரிழந்தனர். அத்தோடு, உயிழப்புகளின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளதாக என சிலியின் தடயவியல் மருத்துவ சேவையின் இயக்குனர் மரிசோல் பிராடோ தெரிவித்துள்ளார். இதற்கமைய கிட்டத்தட்ட 26,000 ஹெக்டயர் (64,000 ஏக்கர்) நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளதாக அந்நாட்டு அனர்த்த…

ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்
| | | | |

ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்

ஜம்மு காஷ்மீரில் நள்ளிரவு 12.38 மணியலவில் (04) 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதென  நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அடியில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உண்டான சேதங்கள் குறித்து இதுவரை தகவல் ஏதும் கிடைக்கப்படவில்லையென சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், அதனை தொடர்ந்து இரு நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதென நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. அதில் முதலாவது நில அதிர்வு 4.4 ரிக்டர்…

ஜப்பானை தாக்கிய பூகம்பத்தில் உயிரிழப்பு 48 ஆக அதிகரிப்பு
| | | | |

ஜப்பானை தாக்கிய பூகம்பத்தில் உயிரிழப்பு 48 ஆக அதிகரிப்பு

புத்தாண்டு தினத்தில் மத்திய ஜப்பானின் கடற்கரையை தாக்கிய பூகம்பத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. இஷிகாவா மாகாணத்தில் நோட்டோ தீபகற்பத்திற்கு அருகில் கடந்த 01ம் திகதி நண்பகலில் இடம்பெற்ற 7.6 ரிச்டர் அளவிலான பூகம்பத்தை அடுத்து சில பகுதிகளில் 1 மீற்றர் அளவு சுனாமி அலை தாக்கியுள்ளது. இச் சம்பவத்தால் பரந்த அளவில் சேதங்கள் ஏற்பட்டிருப்பதாகவும், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடுமென  ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.

இந்திய பெருங்கடலில் நிலநடுக்கங்கள்
| | | | |

இந்திய பெருங்கடலில் நிலநடுக்கங்கள்

மாலைதீவு அருகே வெள்ளிக்கிழமை (29) காலை இந்தியப் பெருங்கடலில் 4 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் (GSMB) குறிப்பிட்டுள்ளது. முதலாவதாக ஏற்பட்ட நிலநடுக்கம்  4.8 ரிச்டர் அளவில்  10 கிலோ மீற்றர் ஆழத்தில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து எற்பட்டுள்ள நிலநடுக்கங்கள் 5.2, 5.8 மற்றும் 5.0 ரிக்டர் அளவாக ஆக பதிவாகியுள்ளன. இரண்டாவது மற்றும் நான்காவது…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித்திட்டம் முன்னெடுப்பு
| | | |

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித்திட்டம் முன்னெடுப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு Global Max Networks (Pvt) Ltd நிறுவனத்தால் பல்வேறு உதவிப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன. கிளிநொச்சி மாவட்டத்தின்  கண்டாவளை, பெரியகுளம், முரசுமோட்டை பகுதிகளில் உள்ள நலன்புரிநிலையங்களுக்கு இந்த  உதவித்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த உதவித்திட்டத்தை நேற்று (19) Global Max Networks (Pvt) Ltd நிறுவனத்தின் பணிப்பாளர் நேரடியாக சென்று நிலையங்களுக்கு பொறுப்பானவர்களிடம் பொருட்களை கையளித்தார். கிளி/கண்டாவளை மகாவித்தியாலய நலன்புரிநிலையத்தில்  120 குடும்பங்களுக்கு மேல் தங்கியுள்ளதுடன்,  பெரியகுளத்தை அண்டிய பகுதிகளில் வசித்த  153க்கும் மேற்பட்டவர்கள்  கிளி/முருகானந்தா ஆரம்ப…

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மன்னார் மக்கள்
| | | |

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மன்னார் மக்கள்

மன்னார் மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் 4 தற்காலிக நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மன்னார் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் (18) பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்  நேரில் சென்று பார்வையிட்டு உள்ளதோடு அந்த மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யுமாறு உரிய அதிகாரிகளிடம் கோக்ரிகை விடுத்தார். மன்னார் மாவட்டத்தில் தொடரும் வெள்ளத்தினால் 632 குடும்பங்களைச் சேர்ந்த 2245 நபர்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர்….

வெள்ளத்தில் மூழ்கும் முல்லைத்தீவு
| | | |

வெள்ளத்தில் மூழ்கும் முல்லைத்தீவு

நாடு முழுவதும் பெய்துவரும் தொடர் மழை காரணமாக நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் அதிகளவான பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் மொத்தமாக 1126 குடும்பங்களைச் சேர்ந்த 3463 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. குறிப்பாக முத்து ஐயன்கட்டுக்குளத்தின் 4 வான் கதவுகள் 2 அடி 9 அங்குலத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. இதனால் முத்து ஐயன்கட்டு, பேராறு, முத்து வினாயகபுரம், வசந்தபுரம், மன்னகண்டல், பண்டாரவன்னி கிராமத்தைச் சேர்ந்த மக்கள்…

வெள்ளத்தினால் அவதிப்படும் கிளிநொச்சி மக்கள்…!
| | | |

வெள்ளத்தினால் அவதிப்படும் கிளிநொச்சி மக்கள்…!

கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழையால் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அதிக மழைவீழ்ச்சியால் நீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக இரணைமடு குளத்தின் 14 வான்கதவுகளும் 3அடிக்கு திறக்கப்பட்டுள்ளன. கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம், புளியம்பொக்கணை ஆகிய பிரதேசங்களில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாய நிலங்களுக்குள் வெள்ள நீர் புகுந்து பயிர்ச்செய்கை நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன், பொதுமக்களின் நாளாந்த செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேறி நண்பர்கள் மற்றும்…