131 மணித்தியாலங்கள் டான்ஸ் மரதன் ஆடி உலக சாதனை

நுவரெலியா மாவட்டத்தில் இளைஞன் ஒருவர் 131 மணித்தியாலங்களில் டான்ஸ் மரதன் ஆடி உலக சாதனை படைத்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த தயாபரன் என்ற இளைஞனே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.

international warriors book of world records ஒழுங்கமைப்பில் உலக சாதனைக்கான டான்ஸ் இடம்பெற்றிருந்தது.

அமைப்பு நடனத்தை இந்தியாவிலிருந்து இரகசிய கண்காணிப்பு கமரா மூலமாக பார்வையிட்டிருந்தது.

லயன் யூட் நிமலனின் நெறியாள்கையில் சர்வதேச சட்ட நியதிகளுக்கமைவாக 6 நாட்களாக டான்ஸ் மரதன் நடைபெற்றுள்ளது.

இதன் தொடக்க நிகழ்வு கடந்த 5ஆம் திகதி நடைபெற்று கடந்த சனிக்கிழமை (11)  நிறைவடைந்துள்ளது.

நிறைவு நிகழ்வில் மதகுரு மற்றும் யோகபுரம் மகாவித்தியாலய அதிபர் த.பிறேமச்சந்திரன், அணிஞ்சயன்குளம் கிராம சேவையாளர் திருமதி வினோதன், தமிழ்த்தாய் கலாமன்றத்தைச் சேர்ந்த யோகநாதன், ஆசிரியர் லயன் சு.சுபநேசன், கலைஞர்கள், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

நிகழ்வின் இறுதியில் போட்டியாளர் தயாபரனுக்கான கௌரவம் வழங்கப்பட்டு அவருக்கான மின்னிதழ் சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *